“நடிகையர் திலகம்” என்னிடம் ஆலோசனை கேட்கல.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய பழம்பெரும் நடிகை..!!

Nadigaiyar Thilagam: நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து 2008 ஆம் ஆண்டு வெளியான படம் நடிகையர் திலகம். நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

அதேபோன்று ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியை மீண்டும் பார்ப்பது போன்று தான் கீர்த்தி சுரேஷின் அற்புதமான நடிப்பு அமைந்திருந்தது.

மரியாதையுடனும், அக்கறையுடனும் நடந்து கொள்ளும் ஒரு சிறந்த மனிதர்.. ரஜினி பற்றி நடிகை விஜயா..!

சிறுவயதில் வாய்ப்பு தேடி அலைவதில் தொடங்கி இறுதியாக கோமாவில் விழுந்தது வரை சிறப்பாக நடித்திருப்பார். மேலும் நடிகையர் திலகம் படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா முக்கிய கதாபாத்நடிகையர்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் 83 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இந்த நிலையில் பழம்பெரும் நடிகை ஜமுனா நடிகையர் திலகம் படம் வெளியாவதற்கு முன்பே படம் குறித்த தன்னுடைய கருத்தை பகிர்ந்திருந்தார்.

அதாவது பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க செட் ஆக மாட்டார். கீர்த்தி சுரேஷ்க்கு தெலுங்கு தெரியாது. அப்போது எப்படி அவரால் சாவித்திரி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க முடியும்?

ஒரே சமயத்தில் சிவாஜிக்கும் பிரபுவுக்கும் ஜோடியாக நடித்த அம்பிகா.. எல்லா படமுமே சூப்பர் டூப்பர் ஹிட்.. தென் இந்தியாவை கலக்கிய நடிகை!

நான் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். சாவித்திரியுடன் நடித்தவர்களில் நான் மட்டுமே உயிரோடு உள்ளேன். சாவித்திரியை பற்றி எனக்கு நிறைய தெரியும். அப்படி இருக்கும்போது படம் எடுப்பவர்கள் என்னிடம் ஆலோசனை எதுவும் கேட்காதது எனக்கு வேதனையாக உள்ளது.

சாவித்திரியை போன்று சினிமாவில் வேறு எந்த ஒரு நடிகையும் சம்பாதிக்கவில்லை. அவர் வீட்டில் நீச்சல் குளம் கட்டினார். மைசூரில் இருந்து சந்தன கட்டைகளை வரவழைத்து பூஜை அறையை உருவாக்கினார். சாவித்ரியின் சென்னை வீடு அந்த காலத்திலேயே ரூ. 1 கோடிக்கு விலை போகும்.

மறைவுக்கு முன் மருத்துவமனையில் எம்ஜிஆர் சொன்ன விஷயம்.. மனம் உருகும் தகவலை பகிர்ந்த பிரபல நடிகை..

அவரது போதாத நேரம் அனைத்து சொத்தும் போய் இறுதியில் மதுவுக்கு அடிமையாகி உடல் மெலிந்து கோமாவிலேயே இறந்துவிட்டார் என்று வருத்ததுடன் கூறினார். நடிகை ஜமுனா, கமல்ஹாசன் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் அவருக்கு தாயாராக நடித்திருந்தார். 2019ல் நடிகை ஜமுனாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews