மனைவியை ஹீரோயினாக்கி கொடிகட்டிப் பறந்த நடிகையை இரண்டாம் நாயகியாக்கி சறுக்கி விட்ட பாக்யராஜ்..

இயக்குநர் இமயம் பாரதிராஜா அறிமுகப்படுத்திய எத்தனையோ நடிகர்களில் தமிழில் ஒளி வீசாமல் தெலுங்கில் கால்பதித்து சாதித்தவர்தான் அருணா. வழக்கமாக பாரதிராஜா தனது கதாநாயகிகளுக்கு வைக்கும் R எழுத்தில் தொடங்கும் பெயர்களில் இவருக்கு மட்டும் விதிவிலக்கு. ராதிகா, ராதா, ரஞ்சிதா, ரேவதி, ரேகா என்ற பெயர்களுக்கு மத்தியில் அருணாவை மட்டும் தனது ஒரிஜினல் பெயரிலேயே நடிக்க வைத்தார் பாரதிராஜா. இவர் நடிப்பில் வெளிவந்த முதல் படம் கல்லுக்குள் ஈரம்.

சிறு பொன்மணி அசையும்  பாடலில் பாரதிராஜா தேடும் நாயகியாக வந்து ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார். தமிழில் படம் வணிக ரீதியாக வெற்றிபெறாவிட்டாலும் அதில் இணைந்து நடித்த விஜயசாந்தியும் இவரையும் பாரதிராஜாவே தெலுங்கிலும்  அறிமுகப்படுத்தினார் . தமிழில் போல் அல்லாது தெலுங்கில் ஒரே படத்தில் உச்சம் சென்றார் அருணா ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட அலைகள் ஓய்வதில்லை பட தெலுங்கு பதிப்பில் நடித்த அருணாவுக்கு ஜோடி தமிழ் நடித்த அதே கார்த்திக் தான். சிலுக்கு ஸ்மிதாவே தெலுங்கில் நடிக்க இங்கு நடித்த தியாகராஜன் பாத்திரத்தில் அங்கு சரத் பாபு நடித்தார் .

அந்த படத்திற்கு தமிழை போல மட்டுமில்லாமல் அதைவிட வரவேற்பை தெலுங்கில் பெற்றது . நான்கு ஆந்திர நந்தி விருதுகளை வென்றது. அருணாவுக்கு விருது இல்லை என்றாலும் தெலுங்கில் பிசி ஆனார். தொடர்ந்து 1990 வரை சுமார் 45 தெலுங்கு படங்களுக்கு மேல் நடித்தார். மேலும் மலையாளம், கன்னடத்திலும் பல படங்களில் நடித்தார். தமிழில் இவருக்கு கடைசி படமாக ஆடி வெள்ளி அமைந்தது.

இளையராஜவா? ஏ.ஆர்.ரஹ்மானா? தேசிய விருதைக் கையில் வைத்து பாலுமகேந்திரா எடுத்த அதிரடி முடிவு

ஏனெனில் தமிழில் சரியாக கவனம் செலுத்தாத காரணத்தால் பெரிய இடைவெளி விழுந்தது. மேலும் அறிமுகமான இரண்டு வருடத்திலேயே பாக்கியராஜ் இயக்கி நடித்த டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தின் நாயகி பூர்ணிமா ஜெயராமுக்கு தோழியாக நடிக்க வேண்டிய தருணமும் வந்தது . தன்னை இரண்டாம் நாயகிக்கும் கிழே என்னை நடிக்கவைத்து விட்டார் பாக்கியராஜ் என்று இவர் வருத்தத்துடன் முன் வைத்த குற்றச்சாட்டு அப்போது திரைப் பத்திரிகைகைளில் பேசப்பட்டது.

மேலும் பாரதிராஜாவின் மற்றொரு படைப்பான முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகத்தின் மகளாக நடித்து இருப்பார்.  தற்போது குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி அமைதியாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் பேட்டி கொடுத்து பழைய நினைவுகளை அசை போடுகிறார் அருணா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.