முதன் முதலாக மேடையில் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அரசியல் பேசிய விஜய்.. நீட், தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்து

சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் இன்று பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் கட்டமாக விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை, பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

முதன் முதலாக விஜய் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அரசியல் பேசியது முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. சிறிது நேரமே பேசிய விஜய் நீட், தேசிய கல்விக் கொள்கை போன்றவை தனது ஆழமான கருத்துக்களைப் பதிவு செய்தார். மேலும் இவ்விஷயத்தில் தனது நிலைப்பாட்டையும் தெரிவித்தார்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற இவ்விழாவில் விஜய் மேடையேறும் போது மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். விஜய் பேசுகையில், இன்று நான் ஒரு முக்கியமான விஷயத்தினைப் பற்றி பேச உள்ளேன் என்றதும் அரங்கமே கூர்ந்து நோக்கியது. நாடு முழுவதும் நீட் தேர்வு விலக்கு கேட்டு போராட்டங்களும் சட்டசபைகளில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு வரும் சூழலில் விஜய்யும் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும். மாநில உரிமைகளுக்கு எதிரான ஒரு தேர்வு தான் நீட் என தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க மொத்த அரங்கமே ஆரவாரம் செய்தது.

இதனையடுத்து கல்வி குறித்து பேச ஆரம்பித்தார். பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றாற் போல் பாடத்திட்டம் இருக்க வேண்டும். மாநில வழிக் கல்வியில் படித்து விட்டு தேசிய வழிக் கல்வியில் தேர்வு வைத்தால் எப்படி எழுத முடியும்?

அனந்த் அம்பானி- ராதிகா திருமணத்தை முன்னிட்டு 50க்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த அம்பானி குடும்பத்தினர்…

கிராமப்புற மாணவர்களுக்கு இது எவ்வளவு பெரிய சிரமமாக இருக்கும்..? கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு குளறுபடியால் அந்தத் தேர்வின் மீதான நம்பகத் தன்மையே குறைந்து விட்டது. நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்துள்ள அந்தத் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விரைவில் தீர்வு காண மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். சிறப்புப் பொதுப்பட்டியல் ஒன்றை உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தினைச் சேர்க்க வேண்டும். மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரத்தை தரப்பட வேண்டும் என்பது என் வேண்டுகோள். எய்ம்ஸ், ஜிப்மர் ஒரு சில மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுமானால் நீட் தேர்வை வைத்துக் கொள்ளலாம். இதுதான் நீட் பற்றி என்னுடைய தனிப்பட்ட கருத்து.”

மேலும் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக மேடையில் வெற்றி நிச்சயம்.. வெற்றி நிச்சயம் என்று முழங்கினார்.

Published by
John

Recent Posts