அடையாளம் தெரியாமல் ஆளே மாறிப் போன கனகா.. காரணம் சொன்ன சரத்குமார்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய பழம் பெரும் நடிகை தேவிகாவின் மகள் தான் கனகா. இவர் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக கங்கை அமரன் இயக்கிய கரகாட்டகாரன் படத்தில் ஹீரோயினியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.தமிழ் சினிமா வரலாற்றில் இன்றளவும் அதிக நாள் ஓடிய படங்களில் ஒன்றாக கரகாட்டகாரன் படம் இருந்து வருகிறது. திரையிட்ட இடங்களில் எல்லாம் இப்படம் அடைந்த வெற்றிக்கு இன்னும் எந்தப் படமும் ஈடாகவில்லை.

புரோட்டா மாஸ்டரான பிரபல ஹீரோ.. பட வாய்ப்புகள் இல்லாதால் நடிகர் எடுத்த திடீர் முடிவு

இத்தனைக்கும் இந்தப் படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கதையோ, காட்சிகளோ கிடையாது. சாதாரண கிராமத்துக் கதையை கவுண்டமணி, செந்தில் காமெடியுடன் ஹிட் பாடல்களைக் கொடுத்து சுமார் 1வருடத்திற்கு மேல் ரசிகர்களை திரைக்கு வர வைத்தார் கங்கை அமரன். இப்படத்தில் ஹீரோயினாக நடித்த கனகாவிற்கு தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. ரஜினியுடன் அதிசயப் பிறவி, பிரபுவுடன் கும்பக்கரைத் தங்கையா, விஜயகாந்துடன் சர்க்கரைத் தேவன்,கோயில் காளை, மம்முட்டியுடன் கிளிப் பேச்சு கேட்க வா போன்ற படங்களில் நடித்தார்.

நடிகை கனகா 6 ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் பணியாற்றியுள்ளார். ஆறு ஆண்டுகளில் சுமார் 30 திரைப்படத்திற்கு மேலாக தமிழ் மற்றும் மலையாளத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

‘சர்கார்‘ பட ஸ்டைலில் கட்சிக்காக ஆட்களைத் தேடும் விஜய்.. இப்படி ஒரு மாஸ்டர் பிளானா?

இந்நிலையில் சுமார் 17 ஆண்டுகளாக இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. பொதுவெளியிலும் அதிகமாக வெளிவருவதில்லை. இவருக்கு என்ன ஆச்சு என்று சினிமா வட்டாரத்தில் இவரைத் தேட ஆரம்பித்தனர். அதன்பின் அண்மையில் குட்டி பத்மினி எடுத்த புகைப்படம் வெளியிட்ட போதுதான் அவர் எந்த அளவுக்கு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் என்பது பலருக்கும் தெரிய வந்தது.

இந்நிலையில் நடிகை கனகா நடிகர் சரத்குமார் உடன் இணைந்து 1992 ஆம் ஆண்டு ‘சாமுண்டி’ என்ற திரைப்படத்தில் கனகா நடித்திருந்தார். சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் சரத்குமாரிடம் கனகா பற்றி கேட்ட போது, அதற்கு நடிகர் சரத்குமார், “கனகா ஒரு ஒப்பற்ற உழைப்பாளி, சினிமாத்துறை மீது அவர் கொண்டிருந்த காதல் இடு இணையில்லாதது. ஆனால், அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சில ஏமாற்றங்களும், வருத்தங்களும் அவர் மனதில் அழியாத காயமாக மாறிவிட்டது . நாளடைவில் அதுவே அவருக்கு மிகப்பெரிய மன அழுத்தமாக மாறிவிட்டது. அதனால் அவர் சினிமாவை விட்டு விலகா காரணமாக அமைந்தது” என நான் நினைக்கின்றேன் என்றார்.

மேலும் சினிமா துறையில் இது போன்று பலருக்கும் மன அழுத்தங்களால் அவதிப்படுகின்றனர. இதனால் தான் நான் சினிமா துறையில் பயணிப்பவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் என்று கூறி வருகிறேன் என்றும் அப்பேட்டியில் கூறியுள்ளார் சரத்குமார். மேலும் இவரைப் போன்று பல ஹீரோயின்கள் தற்போது ஆள் அட்ரஸே இல்லாமல் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.