உயிரைக் காப்பாற்றியதால் பற்றிக் கொண்ட காதல் தீ.. நிரோஷாவைக் ராம்கி கரம்பிடித்தது இப்படித்தான்

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் தங்களுடன் நடித்த நடிகரையோ அல்லது தொழில்நுட்பக் கலைஞர்களையோ காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர். அந்த வகையில் நடிகர் ராம்கி-நிரேஷோ நட்சத்திர தம்பதியின் காதல்கதை சற்று வித்தியாசமானது. மோதலில் ஆரம்பத்து காதலில் முடியும் காதலுக்கு மத்தியில் சினிமாவில் வருவது போலவே நிஜமாகவே நிரோஷாவின் உயிரை ராம்கி இருமுறை காப்பாற்றியிருக்கிறார். பின்னர் நட்பாகப் பழகியவர்கள் நாளடைவில் காதல்வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை நிரோஷா நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் என்று அனைவருக்கும் தெரியும். ராதாரவி, ராதிகா, எம்.ஆர்.வாசு என இவர்களது மொத்தக் குடும்பமே சினிமாத்துறையில் தடம் பதித்து வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர்.

நிரோஷாவின் தந்தையான எம்.ஆர் ராதா மற்றும் ராதிகா இருவருமே நடிப்பில் தனக்கென்று தனி முத்திரையை பதித்திருந்தாலும், நிரோஷா அவர்களுக்கு எல்லாம் விதிவிலக்காக அமையாமல் நானும் இவர்களை விட சலித்தவர் அல்ல என்று தன்னுடைய நடிப்பு திறமையை மூன்று வயதிலேயே காட்டி இருக்கிறார்.

நிரோஷாவின் அப்பா எம்.ஆர் ராதா ஒரு மிகப்பெரிய நடிகர் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் அவருடன் தாலி பெண்ணுக்கு வேலி எனும் திரைப்படத்தில் நிரோஷா மூன்று வயதிலே எம்.ஆர் ராதாவின் மகளாகவே நடித்திருக்கிறாராம். இவருக்கு ஐந்து வயதில் இருக்கும் போது அவருடைய அப்பா இறந்துவிட்டாராம் . நடிப்பில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கெட்டிக்காரியாராக இருந்த நிரோஷா 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

கதையில் திருப்தியடையாத ரஜினி.. சூப்பர் ஸ்டாருக்குச் சவால் விட்டு ஹிட் கொடுத்த இசைஞானி

நடிக்க தொடங்குவதற்கு முன்பு நிரோஷாவின் வீட்டில் அவர்களுடைய அண்ணன்கள் இவருக்கு நடிப்பதற்கு அனுமதி கொடுக்காமல் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், இயக்குனர் மணிரத்தினம் தான் முதன் முதலாக அவரது அக்கா ராதிகாவிடம் பேசி நிரோஷாவை தன்னுடைய முதல் படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

இவரது முதல் திரைப்படமான அக்னி நட்சத்திரம் பெரிய அளவில் நிரோஷாவிற்கு வெற்றியை கொடுத்தது. நிரோஷா பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கமலுடன் இவர் நடித்த சூரசம்ஹாரம் என்னும் திரைப்படம் பெரிய அளவில் நிரோஷாவிற்கு சர்ச்சையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்தில் அதிக அளவில் முத்த காட்சிகள் இடம் பிடித்திருந்ததே காரணம்.

பின் செந்தூரப்பூவே, பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். செந்தூரப்பூவே படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் ராம்கி உடன் நிரோஷாவிற்கு காதல் ஏற்பட்டது. ஆனால் அப்போது கூட அவர் அதை வெளியில் சொல்லவில்லையாம். ஆனால் அதற்குப் பிறகு நிரோஷாவிற்கு நடைபெற்ற ஒரு ரயில் விபத்தில் ராம்கி தான் அவரை காப்பாற்றினார்.

அதற்கு பிறகும் ஒரு திரைப்படத்தில் இவர்கள் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த திரைப்படத்தில் நிரோஷாவை மாடு முட்டுகிற மாதிரி ஒரு சீன் இருந்ததாம். அதில் உண்மையாகவே நிரோஷாவை மாடு முட்ட வந்ததால் ராம்கிதான் காப்பாற்றினார்.

அதனால் அவர் மீது நிரோஷா காதல் கொண்டு அவர்கள் ரகசிய திருமணம் செய்து வீட்டிற்கு தெரியாமல் மூன்று வருடங்கள் மறைத்து வாழ்ந்து வந்தார்களாம். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் இடைவெளி விட்டு சின்னப் பாப்பா பெரிய பாப்பா காமெடி சீரியலில் நடித்து கலக்கினார். தற்போது மேலும் சில சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் நிரோஷா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.