பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்… பேரதிர்ச்சியில் திரைப்பிரபலங்கள்!

பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் காலமானார்.

திரையுலகில் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக வலம் வந்தவர் பிரதாப் போத்தன். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் அழியாத கோலங்கள், இளைக்கோலம், மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், தில்லுமுல்லு, புதுமைப்பெண், சிந்துபைரவி, ஆயிரத்தில் ஒருவன், அலெக்ஸ் பாண்டியன், ரெமோ, பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆத்மா, மகுடம், வெற்றி விழா, லக்கி மேன், சீவலப்பேரி பாண்டி, மைடியர் மார்த்தாண்டா ஆகிய படங்களில் இயக்கியுள்ளார். 1985ம் ஆண்டு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது ‘மீண்டும் ஒரு காதல் கதை” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. கேரள மாநில அரசின் விருது, பிலிம்பேர், சைமா போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார் பிரதாப்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த பிரதாப் போத்தன் தூக்கத்திலேயே இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.பிரதாப் போத்தன் மறைவுக்கு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அல்லது நாளை காலை அவரது இறுதிச்சடங்கு நடக்கும் என தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews