விஜய்யை தனது ஸ்டைலில் வாழ்த்திய பார்த்திபன்.. இவ்வளவு பெரிய தியாகமா என வாழ்த்துமழை..!

தமிழகம் முழுவதும் இப்போது நடிகர் விஜய்யைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறது. எப்போது அரசியலுக்கு வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் யாரும் கண்டிராத வகையில் திடீரென தனது அரசியல் அவதாரத்தினை தமிழக வெற்றி கழகம் என்னும் பெயரில் ஆரம்பித்து ரசிகர்கள் தலைவராக இருந்தவர் மக்கள் தலைவராக மாற அடித்தளம் போட்டார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என சினிமாவிலிருந்து தங்கள் தலைவரைத் தேடிய தமிழக மக்கள் இப்போது அடுத்த தலைவரின் பாய்ச்சல் எப்படி இருக்கப் போகிறது என எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். விஜயகாந்த், கமல்ஹாசன் போல் கட்சியை ஆரம்பித்து 2026 தேர்தலுக்குள் தன்னுடைய முத்திரையை சினிமா களத்தில் பதித்தது போன்று அரசியல் களத்திலும் பதிக்க தயாராகிவிட்டார் விஜய்.

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு இந்திய சினிமா உலகமே வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. மேலும் இதர அரசியல் கட்சியினரும் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாளிதழ்களில் விளம்பரம், தமிழகம் முழுக்க பேனர்கள், போஸ்டர்கள் என அவரது இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் விஜய்க்கு தனது வழக்கமான ஸ்டைலில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “ நூறு கோடிக்கு மேல் சன்மானம் பெறும் விஜய் தன் வருமானத்தைத் தியாகம் செய்து விட்டு மக்கள் பணி புரிய முழு நேர அரசியல்வாதியாக முன்வருவது பாராட்டுக்குரியது. நடிப்பு சாம்ராஜ்யத்தை நவரத்தின கிரீடத்தைக் கழட்டி வைக்கப் போகிறார் என்று மனம் சட்டென கொண்டது. வேண்டுமா இவ்வளவு தியாகம்? எஸ்எஸ் போட்டியிலிருந்து விலகி சிஎம் போட்டிக்குள் நுழையும் ஆக்‌ஷன் அதிரடியாகவும் உள்ளது. முழுநேரமாக வருவது பாராட்டுக்குரியது.

காஞ்சிப்பெரியவர் எம்ஜிஆரிடம் கேட்ட உதவி… அதற்கு மக்கள் திலகம் சொன்ன பதில் தான் ஹைலைட்

நடிக்க வந்தபோதே அடிக்க வந்த ஆயிரம் விமர்சனங்களை வெட்டி வீழ்த்தி தமிழகத்தில் வெற்றி கண்டவர். அதிர்ந்து பேசா அமைதியே தன் அடையாளமான அன்பர் விஜய், அரசியல் களத்தில் எப்படி சமாளிப்பார் என அவர் மீதுள்ள அக்கறையால் நாம் யோசித்தாலும், அவர் சாமர்த்தியமாக ஆலோசித்துவிட்டுதான் கால் பதிக்க முழு வீச்சில் இறங்கியுள்ளார் என்றே தோன்றுகிறது. ‘அமைதியான கடலே ஆழிப்பேரலையையும் உருவாக்குகிறது’ என்பதால் மக்கள் பணிக்காக ரியல் ஹீரோவாக உயரும் விஜய்யை நெஞ்சாரமாக வாழ்த்துகிறேன்” என அப்பதிவில் நடிகர் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.