நடிப்புக்காக வங்கிப் பணியை இழந்த மோகன்.. மைக் மோகனின் வெற்றிக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா?

தமிழ் சினிமாவில் 1980-களின் பிற்பகுதியில் ரஜினி, கமலைத் தாண்டி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர்கள் இரண்டு நடிகர்கள். ஒருவர் மோகன். மற்றொருவர் ராமராஜன். இதில் ராமராஜன் கிராமத்து பாணியில் போக, மோகன் வித்யாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் ரகம் தான். அதிலும் பாடல்களைச் சொல்லவே தேவையில்லை. மைக் மோகன் பிளே லிஸ்ட் இடம்பெறாத இசை செயலிகளே கிடையாது. முதன் முதலாக பாலுமகேந்திரா இயக்கிய கோகிலா படத்தில் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது மோகனுக்கு. இது கன்னடப் படம். அந்தப் படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன்.

ஒருமுறை மைசூரைத் தாண்டி ஒரு காட்டுப் பகுதியில் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அப்போது மோகன், கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் மோகன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் எப்போது படப்பிடிப்பு என்ன காட்சி என்பதை குறித்து வைத்துக் கொள்ளாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். அதன்பின் அவருக்கு போன் செய்தும், தந்தி அனுப்பியும் வரச் சொல்லியிருக்கிறார்கள் படக்குழுவினர். ஆனால் அவர் வருவதற்குள் கமல் கிளம்பிவிட்டார். இதனால் அந்தக் காட்சிகளில் கமல்ஹாசன் மட்டும் நடித்திருப்பார்.

அதன்பின் வந்த மோகனை பாலுமகேந்திரா கடுமையாகத் திட்ட தனக்கு ஷுட்டிங் விபரங்கள் தெரியாது என்று கூறியிருக்கிறார் மோகன். அதன்பின் கமல்ஹாசன் மோகனை அழைத்து எப்படி கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பது குறித்து கற்றுக் கொடுத்திருக்கிறார். தான் முதல் படத்தில் செய்த தவறை இனி எந்தப் படத்திலும் செய்யக் கூடாது எனசபதம் பூண்டு அடுத்து நடித்த அனைத்து படங்களிலும் சரியான நேரத்திற்குப் படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம் மோகன்.

சாதி ஆணவக் கொலைகள் பற்றி படம் எடுப்பீங்களா? மாரி செல்வராஜ் பரபரப்பு பேட்டி

கோகிலா படத்தில் சிண்டிகேட் வங்கிப் பணியாளாராக நடித்திருப்பார் மோகன். ஆனால் உண்மையில் மோகன் சிண்டிகேட் வங்கி அதிகாரி பணிக்கு தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்றிருக்கார். ஆனால் அதற்குள் திரையுலகம் அழைக்கவே சிண்டிகேட் வங்கியில் தன்னுடைய நிலையைக் கூறி கமிட்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ள படங்களை முடித்தபின் பணியில் சேர்ந்து கொள்கிறேன். அதுவரை சம்பளப் பிடித்தம் செய்து விடுமுறை தருமாறு கேட்டிருக்கிறார்.

வங்கியும் அதற்கு ஒப்புக் கொண்டு சில நாட்கள் விடுமுறை அளித்தது. ஆனால் மோகனால் அந்த வேலையைத் தக்க வைக்க முடியவில்லை. ஏனெனில் அடுத்தடுத்து பல நல்ல பட வாய்ப்புகள் வந்ததால் வங்கி வேலையை உதறினார் மோகன்.

Published by
John

Recent Posts