இதெல்லாம் நடக்குற காரியமா? தளபதி 68 பற்றி வாயைத் திறக்காத மோகன்

தமிழ் சினிமாவில் 80-களில் ரஜினி, கமல் கோலோச்சிக் கொண்டிருக்க இயக்குநர் மகேந்திரன் படைப்பில் உருவான நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் மோகன். சுகாசினி, பிரதாப் போத்தன் ஆகியோர் இணைந்து நடித்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து மோகன் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து பெரும்புகழை அடைந்தார் மோகன்.

இவருடைய படங்கள் பெரும்பாலானவை 200 நாட்களைத் தாண்டி ஓடியவை. இசைஞானியின் இசையில் இவருக்கு அமைந்த பாடல்கள் எல்லாமே ஹிட் ரகம்தான். இன்றும் பிளேலிஸ்ட்களில் மோகன் பாடல்கள் இல்லாத இசை ரசிகர்களே இல்லை எனலாம்.

மைக்பிடித்து பல்வேறு பாடல் காட்சிகளில் நடித்ததால் மைக் மோகன் என்றும் இரசிகர்களால் அழைக்கப்பட்டார். இதுமட்டுமன்றி தொடர்ந்து வெற்றி விழா படங்களைக் கொடுத்ததால் சில்வர் ஜுபிளி நாயகனகாவும் திரையுலகில் கொண்டாடப்பட்டார்.

STR48 சூப்பர்ஸ்டாருக்கு சொன்ன கதை!! – டைரக்டர் தேசிங்கு பெரியசாமி

மணிரத்னம் இயக்கிய ‘மௌனராகம்‘ திரைப்படம் இவரின் நடிப்பை உலகறியச் செய்தது. கணவன்-மனைவி புரிதலை உணர்த்திய இந்தப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. 1990களுக்குப்பிறகு சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட மோகன் தற்போது ‘ஹரா‘ என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தற்போது தளபதி 68-லும் நடிக்கிறார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் வெங்கட் பிரபு இயக்கும தளபதி68 படத்தின் ஷுட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது எனவும், படத்தில் எனக்கு என்ன கதாபாத்திரம் என்பதை இப்போது கூற இயலாது என்றும் தெரிவித்தார். விட்டா மொத்த 68 கதையையும் கேட்பீர்கள் போல, எல்லாத்தையும் இப்போ சொல்ல முடியுமா? இதெல்லாம் நடக்கிற காரியமா என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு இதற்கு முன் நான் வில்லன், குணச்சித்திரம் போன்ற அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளேன். அந்த வகையில் இதிலும் ஒரு புதுமையான கதாபாத்திரம்தான் எனவும் பட்டும்படாமலும் படத்தின் அப்டேட்டை தெரிவித்தார்.

வெங்கட் பிரபுவின் தளபதி 68 படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைகின்றனர். தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் மும்முரமாக தற்போது ஷூட்டிங் நடைபெறுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.