நடிகர் ஜெய்க்குப் பின்னால இப்படி ஒரு இசைக் குடும்பமா? யாரும் அறியா ஜெய்யின் மறுபக்கம்..

தற்போதுள்ள இளம் ஹீரோக்களில் நடிகர் ஜெய் சற்று தனித்துவமானவர். துறுதுறு பேச்சு, பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் போன்றவற்றால் திரையில் வசீகர்ப்பவர். இயக்குநர் வெங்கடேஷ் பகவதி திரைப்படத்தில் இவரை விஜய்யின் தம்பியாக முதன் முதலில் வெள்ளித் திரையில் நடிக்க வைத்தார்.

சென்னையைச் சேர்ந்த நடிகர் ஜெய் இசையமைப்பாளர் தேவாவின் நெருங்கிய உறவினர் ஆவார். தேவா, சபேஷ், முரளி ஆகிய இசையமைப்பாளர்கள் ஜெய்-க்கு பெரியப்பா, சித்தப்பா உறவுமுறை வேண்டும். ஆரம்ப காகலட்டத்தில் நடிகர் ஜெய் தேவாவின் இசைக்குழுவில் கிட்டார் வாசிப்பவராக இருந்துள்ளார்.

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தளபதி விஜய்யை வைத்து பகவதி படத்தினை எடுத்துக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நடிகர்களைத் தேர்வு செய்த இயக்குநர் விஜய்யின் தம்பி கதாபாத்திரத்திற்காக யாரைத் தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தில் இருந்துள்ளார்.

விஜய்யும் சிலரை பரிந்துரை செய்ய இயக்குநர் வெங்கடேஷ் திருப்தி ஆகவில்லை. எனவே ஆடிஷன் வைத்து விஜய் தம்பி கதாபாத்திரத்திற்கு வேறு புதுமுக நடிகரைத் தேர்வு செய்யலாம் என்று எண்ணி ஆடிஷன் வைக்க, பலர் வந்தனர்.

சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. உருக வைத்த யுவன்.. கரைய வைத்த விஜய் – பவதாரிணி குரல்

அப்படியும் வெங்கடேஷுக்கு யாரும் திருப்தி அளிக்கவில்லை. பாதி படத்திற்கு மேல் ஷுட்டிங் போய்விட்டது. இந்நிலையில் படத்தின் இசைப் பணிகளுக்காக தேவாவின் ஸ்டுடியோவிற்கு ஏ.வெங்கடேஷ் சென்றிருக்கிறார். அப்போது அங்கு கிட்டார் வாசித்துக் கொண்டிருந்த ஜெய்யைப் பார்த்துள்ளார்.

அச்சு அசல் விஜய்யின் தம்பி போலவே இருந்ததால் பார்த்தவுடனே வெங்கடேஷுக்குப் பிடித்துப் போக ஸ்ரீகாந்த் தேவாவிடம் அவரைப் பற்றி விசாரிக்கவே அவரின் நெருங்கிய உறவினர் என்பது தெரிய வந்தது.

அதன்பின் ஜெய்யிடம் நடிக்க விருப்பமா என்று கேட்க, அவர் முதலில் தயங்கி இருக்கிறார். அதன்பின் விருப்பம் இல்லாமல் இருக்கவே வெங்கடேஷ் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்று சில நாட்கள் ஷுட்டிங் பாருங்கள். விருப்பம் இருந்தால் நடியுங்கள் முக்கியமான கதாபாத்திரம் என்று கூறியிருக்கிறார்.

விஜய்யின் தம்பி கதாபாத்திரம் என்றவுடனே ஜெய்க்கு மனதிற்குள் மத்தாப்பு வெடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார். அதன்பின் பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக ஜெய்காந்த் என்ற ஜெய்யை அறிமுகப்படுத்தினார் இயக்குநர் வெங்கடேஷ். இப்படித்தான் ஜெய்யின் திரைப்பயணம் ஆரம்பித்தது.

அதனைத் தொடர்ந்து சென்னை-28 நடித்தவர், சுப்ரமணியபுரம் படத்தில் கவனிக்க வைத்து தமிழ்த் திரையுலகல் நிரந்தர இடம்பிடித்தார். தொடர்ந்து கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வாமணன் போன்ற படங்கள் ஹிட் ஆக தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் நிலையான இடத்தினைப் பிடித்து நடித்து வருகிறார் ஜெய்.

Published by
John

Recent Posts