திடீரென மாரடைப்பால் இறந்த தமிழ் சினிமா பிரபலம் : அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் உடல்நலக்குறைவால் தொடர்ந்து மரணமடைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. 2023 தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு ராசியில்லை போலும். வருடம் ஆரம்பித்ததில் இருந்து தோராயமாக மாதம் ஒருவர் உயிரிழந்து வரும் வேளையில் தற்போது மேலும் ஒரு நடிகரின் மரணம் திரையுலகை நிலைகுலையச் செய்துள்ளது.

பன்முகக் கலைஞரான டி.ராஜேந்தர் இயக்கத்தில் உருவான ‘உயிருள்ளவரை உஷா‘ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கங்கா. சுருட்டை முடியும், ஒல்லியான தேகமும், சாந்தமான முகமும் கொண்ட கங்கா அப்போது வந்த பல படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துக் கலக்கினார்.

தற்போது 63 வயதான கங்கா திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைப் பூர்வீகக் கொண்ட கங்கா ‘மீண்டும் சாவித்ரி‘, ‘கரையைத் தொடாத அலைகள்‘ போன்ற படங்களில் நடித்துள்ள அவர் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இத்தொடர்கள் தூர்தர்ஷன், சன்டிவி போன்ற சேனல்களில் ஒளிபரப்பானது.

’தங்கமான ராசா’ திரைப்படத்தில் நடிகர் ராமராஜனுக்கு நண்பனாக நடிகர் கங்கா நடித்திருப்பார். மேலும் 1990ஆம் ஆண்டு வெளியான ’முருகனே துணை’படத்தில் சுதா சந்திரன், ராஜேஷ் ஆகியோருடன் இணைந்து நடிகர் கங்கா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காமெடி நடிகர் to கிறிஸ்தவ மத போதகர் : மறைந்தார் ஜுனியர் பாலையா

திருமணம் செய்து கொள்ளாத கங்கா தனது சகோதரர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த கங்காவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர்பிரிந்தது. இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

கங்காவின் மறைவுச் செய்தி அறிந்த திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது உடல் சொந்த ஊரான சிதம்பரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு நடக்கவுள்ளது.

சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு திரை பிரமுகர்கள் உயிரிழந்து வருவதால் திரையுலகம் ஆடிப் போய் உள்ளது. இந்த மாதம் மட்டும் ஜுனியர் பாலையா, கங்கா போன்றோர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக மனோபாலா, வாணி ஜெயராம், எதிர் நீச்சல் மாரிமுத்து, மயில்சாமி, இயக்குநர் அற்புதன் உள்ளிட்ட பல  திரையுலகைச் சார்ந்தவர்கள் பலர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...