நடிகர் ஆர்யாவின் ‘Mr. X’… அவரே வெளியிட்ட அப்டேட்…

ஜாம்ஷாத் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் ஆர்யா 2005 ஆம் ஆண்டு ‘அறிந்தும் அறியாமலும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘நான் கடவுள்’, ‘மதராசபட்டினம்’, ‘ராஜா ராணி’, போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஆனார். சமீபத்தில் அவர் நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மேலும் புகழடைந்தார்.

இந்த நிலையில், தற்போது, பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் சார்பில் எஸ். லஷ்மண் குமார் தயாரிப்பில், இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘Mr. X’. இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் கெளதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது அதிரடி காட்சிகள் நிறைந்த படமாகும். திபு நின்னன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ஆர்யா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இந்த படத்திற்காக அவரது உடலமைப்பை மாற்றியுள்ளார். அந்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த பதிவில் இந்த திரைப்பாடத்தைப் பற்றி சில தகவலையும் பகிர்ந்து உள்ளார்.

அந்த பதிவில் நடிகர் ஆர்யா கூறியிருப்பது என்னவென்றால், எனது ‘Mr. X’ படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த படத்திற்கு மார்ச் 2023 இல் ஸ்கிரிப்ட் தயாரானது. இதற்காக உடல் அமைப்புகளை கொஞ்சம் மாற்ற வேண்டி இருந்தது. அதற்காக ஏப்ரல் 2023 இல் இருந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கியது.

இப்போது இப்படத்தின் கடைசி ஷெட்டியூலில் இருக்கிறோம். விரைவில் இப்படம் வெளியாகும். உங்கள் ஆதரவை எப்போதும் தாருங்கள். கண்டிப்பாக அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று பதிவிட்டிருந்தார் நடிகர் ஆர்யா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews