ஒரு பொண்ணுகிட்ட கேட்கக் கூடாத கேள்வி கேட்ட அருண்விஜய் : ஆடிப்போன அருண்விஜய் மனைவி

தமிழ் சினிமாவில் வாரிசு வழி வந்த கதாநாயகர்களில் அருண்விஜய்யும் ஒருவர். நடிகர் விஜயக்குமாரின் மகனான அருண்விஜய் சினிமாவில் முறை மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானார். துறுதுறு நடிப்பும், அழகான உடல்வாகும் கொண்ட அருண் விஜய்க்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.

எனினும் தனது விடாமுயற்சியால் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த கிடைத்த படம்தான் இயற்கை. இயக்குநர் ஜனநாதனின் இயற்கை படத்தில் கப்பல் கேப்டனாக நடித்து சிறந்த நடிகராக ஜொலிக்க ஆரம்பித்தார். அதன்பின் தொடச்சியாக இவர் நடித்த மாஞ்சாவேலு, தடையறத்தாக்க, குற்றம் 23, மலை மலை போன்ற படங்களில் ஆக்சன் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தன் வெற்றிக் கணக்கை ஆரம்பித்தார்.

அஜீத்துடன் என்னை அறிந்தால் படத்தின் மூலம் நடிப்பில் வேறொரு தளத்திற்குச் சென்றார். கௌதம்வாசுதேவ் மேனன் என்னை அறிந்தால் படத்திற்காக அருண் விஜய்யை வில்லனாக்க விக்டர் கதாபாத்திரம் அவருக்கு புகழை சம்பாதித்துக் கொடுத்தது.

இந்நிலையில் தன் மனைவி குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அருண் விஜய், தனக்கு பெண்பார்க்கும் போது முதன் முதலில் தன் மனைவியிடம் கேட்ட கேள்வி அவரை அதிர்ச்சியாக்கியது என்றார். அது என்னவென்றால் “எவ்வளவு பெரிய ஹீல்ஸ் போட்டுருக்கீங்க என்று கேட்க அவர் மனைவியோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க என்று காலை நீட்டியிருக்கிறார். அப்போது தான் ஒரு பெண்ணிடம் கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டோமே“ என்று உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

தயாரிப்பாளர்களின் ஹீரோ இவர்தானா? சம்பளத்தை கண்டுக்கிற மாட்டராமே..!

அதன்பின் இருவருக்கிடையே நிறைய விஷயங்களில் ஒத்துப் போனதால் எங்கள் திருமணம் நடந்தது என்றும் அப்பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் பெண் பார்க்கும் போது தனக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்றுஅவரது தாயாரிடம் கண்டிஷன் போட்டதாகவும் அதற்கு எதிர்மறையாகத்தான் என் மனைவி ஆரத்தி கிடைத்தார் என்றும் கூறியுள்ளார்.

அருண் விஜய் தற்போது பாலாவின் இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு படத்திலும் அருண் விஜய் கதாபாத்திரத்திற்காக  தன்னுடைய அசுரத் தனமான உழைப்பைப் போடுவதால் வணங்கான் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...