மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட அஜித்.. பதறிப்போன ரசிகர்கள்.. என்ன ஆச்சு?

நடிகர் அஜித் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலுக்கு திடீரென என்ன ஆனது என ரசிகர்கள் பதறி துடித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு எச்.வினோத் இயக்கதில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் அதனுடன் வெளியான விஜயின் வாரிசு படத்தை விமர்சன ரீதியாக விழ்த்தியது . அதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஒரு வருடத்திற்கு மேலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அஜித் மருத்துவமனையில் அனுமதி:

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துவரும் அஜித் சமீபத்தில் சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில் தன் மகன் விளையாடும் இடத்தில் அஜித் விளையாடுவது போல் புகைப்படங்கள் வெளியாகின. மேலும், சமீபத்தில் தனது மகன் பிறந்தநாளை மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்காவுடன் ஃபுட் பால் டிசைன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

விடாமுயர்சி படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிக விலைக்கு பெற்றது. மேலும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியது.
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் ஆரவ், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வரும் 11ம் தேதி மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல உள்ள நிலையில், நடிகர் அஜித் வழக்கமான உடல் பரிசோதனையை செய்துக் கொள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரே நாளில் வீடு திரும்பி விடுவார் என அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை அறிந்த ரசிகர்கள் அவரது ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து சீக்கிரம் அஜித் உடல் நலன் பெற்று வீடு திரும்ப வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நடிகர் அஜித்துக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். பல்வேறு நாடுகளுக்கு மோட்டார் பைக் மூலமாகவே சுற்றுப் பயணம் செய்த அஜித் விடாமுயற்சி படத்திற்காகவும் கடுமையாக உழைத்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.