Karthigai Deepam: ரவுடிகளிடம் இருந்து தப்பித்து விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபிராமி… ஐஸ்வர்யாவுடன் கூட்டணி சேர்ந்ததை நினைத்து பயப்படும் ரியா…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் ரவுடி மணியின் மனைவியை வைத்து கார்த்தியும் இன்ஸ்பெக்டர் சரவணனும் அபிராமியை கடத்தி வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகின்றனர். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.

இன்றைய எபிசோடில் இனி என்ன நடக்கிறது என்பதை இனிக் காணலாம். கார்த்தியும் இன்ஸ்பெக்டர் சரவணனும் ரவுடி மணியைக் கூட்டிக் கொண்டு அபிராமியை கடத்தி வைத்திருக்கும் இடத்திற்கு செல்கின்றனர். அங்கு மயக்கத்தில் இருந்து விழித்த அபிராமி எதற்காக என்னை கடத்தி வச்சிருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு ரவுடிகள் சொல்லமுடியாது என்று கூறிவிடுகின்றனர்.

பின்னர் அபிராமி எனக்கு தண்ணீர் வேண்டும் கொஞ்சம் கயிறை அவிழ்த்து விடுப்பா என்று கேட்கிறார். ரவுடி சங்கர் தூரப் போன பின்பு இன்னொரு ரவுடி பாவம் பார்த்து அவிழ்த்து விடுகிறார். அவன் தண்ணீர் எடுத்து வருவதற்குள் அபிராமி அங்கிருந்து தப்பித்து விடுகிறார். பின்பு வந்த ரவுடி சங்கர் கட்டை அவிழ்த்து விட்டவனை திட்டுகிறான்.

இரண்டு ரவுடிகளும் அபிராமியை தேடி அலைகின்றனர். அதற்குள் அபிராமி தப்பித்து வரும் வழியில் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு மயக்கமடைகிறார். அங்கிருந்த பொதுமக்கள் அபிராமியை ஆட்டோவில் ஏற்றி ஹாஸ்பிடலுக்கு அனுப்பி விடுகின்றனர். அதை ரவுடிகள் பார்த்து விடுகின்றனர். உடனே ஐஸ்வர்யாவிடம் இருந்து போன் வருகிறது. நடந்ததை கூறி ரவுடிகள் சமாளிக்கின்றனர். பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடலுக்கு தான் போயிருக்காங்க நாங்க பாத்துகிறோம்னு சொல்லுகிறார்கள்.

ஹாஸ்பிடலில் கம்பளைண்ட் எடுத்துக் கொண்டு போலீசிடம் தகவல் கூறிவிட்டு அபிராமிக்கு சிகிச்சை ஆரம்பிக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் சரவணனும் கார்த்திக்கும் அபிராமியை அடைத்து வைத்திருந்த இடத்திற்கு வந்து பார்க்கிறார்கள். அங்கு அபிராமியை காணவில்லை என்றதும் குழப்பமடைகிறார்கள். அங்கிருந்த ஐஸ்வர்யா கொடுத்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றுகிறார்கள். இன்ஸ்பெக்டர் சரவணன் கார்த்தியிடம் இது சாதாரணமான விஷயம் இல்லை, இதற்குப் பின்னாடி பெரிய பிளான் இருக்கு அம்மா உயிருக்கு ஆபத்து இருக்கிற மாதிரி தெரியுது என்று சொல்கிறார். அதைக் கேட்டு கார்த்திக் அதிர்ச்சியடைகிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...