செய்யுறது திருட்டு.. அதிலும் ஒரு எமோஷனல்.. திருடன் செய்த தக் லைஃப் சம்பவம்.. வைரலாகும் லெட்டர்.

தூத்துக்குடி : நாடெங்கிலும் தற்போது புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு அதன்படி வழக்குகள் பதியப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. பழைய சட்டங்களைக் காட்டிலும் புதிய சட்டங்களில் நிறைய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. சிறு திருட்டு, மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்கு சிறை அல்லது சமூக சேவை புரிதல் என தண்டனைகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் பல குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற ஒரு குற்ற சம்பவத்தில் திருடன் செய்த அந்த ஒரு சம்பவம் தக்ஃலைப் -ஆக மாறியிருக்கிறது. ஒரு வீட்டில் திருட வந்தவர்கள் கைவரிசை காட்டும் போது கிடைத்ததை எல்லாம் எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகத்தான் முயற்சி செய்வார்கள். ஆனால் இந்தத் திருடன் மட்டும் சற்று மனசாட்சி உள்ள திருடனாக இருப்பான் போல. திருச்செந்தூரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியையின் வீட்டில் புகுந்த திருடன் அங்கிருந்து ரூ. 60,000 ரொக்கம், தங்க நகை, வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறான்.

முதன் முதலாக மேடையில் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அரசியல் பேசிய விஜய்.. நீட், தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்து

ஆனால் அந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட பின் அங்குள்ள ஒரு கவரில் லெட்டர் ஒன்றை எழுதி வைத்துச் சென்றிருக்கிறான். அதில், “என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாதத்தில் திருப்பித் தந்துவிடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை என்று எழுதி வைத்துச் சென்றிருக்கிறான்.” ஓய்வு பெற்ற ஆசிரியையை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் திருடனை வலைவீசித் தேடி வருகின்றனர். இருப்பினும் இக்கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

என்னதான் திருட்டுத் தொழில் செய்தாலும் அதிலும் ஒரு நேர்மையா என்று நெட்டிசன்கள் கமெண்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.

Published by
John

Recent Posts