ஜனவரி 9 உத்திரகோசமங்கை வாருங்கள்

ஜனவரி 10ம் தேதி மார்கழி மாதத்துக்குரிய திருவாதிரை நட்சத்திரம் வருகிறது.அன்றைய தினம் வரும் திருவாதிரை அன்று நடராஜபெருமானுக்கு அனைத்து கோவில்களிலும் சிறப்பு உற்சவங்கள், வைபவங்கள் நடைபெறும்.

8d941da079bdcb854c8f6292dc0d291f

சிதம்பரம் உள்ளிட்ட நடராஜருக்குரிய முக்கிய கோவில்களில் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படும்.

இதே போல் ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசங்கையில் விழா நடக்கிறது. இங்கு ஆசியாவிலேயே இல்லாத மிகப்பெரிய மரகத நடராஜர் சிலை உள்ளது. மரகதத்திற்கு அதிர்வுகளை தாங்கும் சக்தி இல்லை என்ற கருத்து உள்ளதால் அதன் மீது ஆருத்ரா தரிசனம் அன்று புதிதாக சந்தனம் பூசப்படும். பூசப்பட்ட சந்தனம் மீண்டும் அடுத்த வருடம் விழாவுக்குத்தான் களையப்படும்.

சென்ற வருடம் பூசிய பழைய சந்தனத்தை இந்த வருடம் களைவார்கள். காலண்டரில் ஆருத்ரா தரிசனம் என்று போட்டிருக்கும் நாளில் தான் சிதம்பரம் உள்ளிட்ட எல்லா நடராஜர் கோவில்களிலும் உற்சவம் நடைபெறும். ஆனால் இங்கு மட்டும் ஆருத்ரா தரிசனத்துக்கு முதல் நாளே கூட்டம் களை கட்டி விடும். ஏனென்றால் அன்றுதான் பழைய சந்தனத்தை களைவார்கள் அன்றுதான் மரகத நடராஜரை சந்தனம் இல்லாமல் அசல் மரகதக்கல்லோடு தரிசிக்க முடியும். ஆருத்ரா தரிசனத்துக்கு முதல் நாள் இப்படியாக தரிசிக்க முடியும். உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள் சரியாக ஆருத்ரா தரிசனத்தன்று அதிகாலை சந்தனம் பூசப்பட்டு விடும் பின்பு சந்தனம் பூசப்பட்ட நடராஜரைத்தான் நாம் ஒரு வருடத்துக்கு பார்க்க முடியும். அதனால் ஆருத்ரா தரிசனத்துக்கு முதல் நாளே உத்திரகோசமங்கை வாருங்கள் நடராஜபெருமான் அருள் பெற்று செல்லுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews