70 வருடம் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து வாழ்ந்த அதிசய சாமியார் மரணம்

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் சாது பிரகலாத் ஜனி என்ற சாமியார். இவர் தீவிர ஆன்மிக ஈடுபாடு காரணமாக பல வருடம் முன்பே துறவறத்தை தேர்ந்தெடுத்தார்.

c9337e7943afda8eb746f5a05c584f50

பஞ்சபூதங்களில் நீரை மட்டும் அருந்தியே உயிர்வாழலாம் என்று பல வருடங்களாக அதாவது 70 ஆண்டுகளாக தண்ணீர் மட்டும் அருந்தியே உயிர்வாழ்ந்து வந்தார்.

சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் செய்தியாளர் ராஜநாராயணன் நடத்திய நடந்தது என்ன நிகழ்ச்சியில் இவரைப்பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. அவரின் முழு பேட்டியும் அதில் வெளியானது.தற்போது அவருக்கு வயது 90

ஒருவேளை சாப்பிடாவிட்டால் கூட பசி உயிர்போகும் நிலையில் 70 ஆண்டுகளாக எந்த ஒரு உணவுப்பொருளின் மீதும் ஆசைப்படாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து வாழ்ந்து வந்த சாமியாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது .

பனஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜி அம்மன் என்ற கோயில் அருகே சிறிய குகை போன்ற ஆசிரமத்தை அமைத்தார். இவர் பெண்களை போல புடவை, நகைகள் அணிந்து வந்ததால் மக்கள் அவரை ‘மாதாஜி’ என அழைத்து வந்தனர்.

இவரது சொந்த மாவட்டம் குஜராத் அருகே காந்திநகர் மாவட்டமாகும். அங்கு ஒரு கிராமத்தை சேர்ந்தவர். உடல்நலக்குறைவால் சொந்த ஊர் செல்ல வேண்டும் என்று ஆசைகொண்ட சாமியார் சொந்த ஊரில் மரணமடைந்தார்.

சாமியாரின் சீடர்கள் இவரது உடலை கொண்டு வந்து அவரது ஆஸ்ரமத்தில் நல்லடக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.