உலக நாயகன் கமல் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்த 6 புதுமையான தொழில்நுட்பம்.. தலையை சுற்றும் அப்டேட்!

உலக நாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவின் மேதை என்று தான் புகழ வேண்டும். சினிமாவில் அவர் செய்யாத புது முயற்சிகளே இல்லை என சொல்லும் அளவிற்கு புதுமையை புகுத்திய உள்ளார் கமல்.

கமலஹாசனின் ஒவ்வொரு படங்களும் சில சமயங்களில் புரியாது என ரசிகர்கள் சொல்லுவது வழக்கம். பத்து வருடங்கள் கழித்து தான் புரியும், அந்த அளவிற்கு அவருடைய படங்கள் ரொம்பவே அட்வான்ஸாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

இந்நிலையில் கமல்ஹாசன் அவருடைய படங்களில் முதல்முறையாக ஆறு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அது என்னென்ன படங்கள் என பார்க்கலாம் வாங்க..

1.விக்ரம்

எழுத்தாளர் சுஜாதாவால் குமுதம் வார இதழில் தொடர்கதையாக எழுதப்பட்டு வந்த கதை தான் விக்ரம் திரைப்படம். விக்ரம் திரைப்படம் 1986 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகியது. தமிழ் சினிமா உலகத்தில் முதல் முதலில் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்ற பேரையும் இந்த திரைப்படம் பெற்றுள்ளது.

மேலும் இந்த படத்தில் தான் முதன் முதலாக கம்ப்யூட்டர் மூலமாக இசையமைக்கப்பட்டுள்ளது. விக்ரம் படத்தின் ஆடியோவை நாம் கேட்கும் போதே இந்த படத்திற்கு இசையமைத்தது இளையராஜா என்று தெரிய வரும்.

2.தேவர் மகன்

உலகநாயகன் மற்றும் நடிகர் திலகம் இவர்கள் இரண்டு பேரும் போட்டி போட்டு நடித்த திரைப்படம் தான் தேவர்மகன், இந்த படம் 1992 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படம் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. தேவர் மகன் திரைப்படத்திற்கு கமல் தான் ஒரு வாரத்திலேயே கதை மற்றும் திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு திரைக்கதை எழுத கூடிய சாஃப்ட்வேர் பயன்படுத்தி தான் கமல் எழுதியுள்ளார் என்பது ஒரு புது முயற்சியாக பார்க்கப்படுகிறது.

3. மகாநதி

இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் மகாநதி. இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு நெருக்கமான படம் என்றே கூறலாம். இந்த படம் 1994 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் முதல் முறையாக வீடியோ காட்சிகளை எடிட் செய்ய ஆவிட் சாஃப்ட்வேர் என்னும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்டது.

4. குருதிப்புனல்

கமல்ஹாசன் அவர்களுடைய அடையாளங்களில் ஒன்றாகவும் மற்றும் பயங்கரமான ஒரு பாராட்டு கிடைத்த படம் குருதிப்புனல் . இந்த படத்திற்கு கமல்ஹாசன் தான் திரைக்கதை,கதை எழுதியுள்ளார். உலக சினிமாவில் முதல் முறையாக இந்த படத்தில் தான் டால்பி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் ரிலீஸின் போது சென்னையில் இருக்கும் தேவி தியேட்டரை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த செலவில் டால்பி திரையரங்கமாக மாற்றினார்.

5 இந்தியன்

சினிமா மீது தீராத காதல் கொண்ட கமல்ஹாசனின் பசிக்கு தீனி போடும் விதமாக சங்கர் கூட்டணியில் உருவான படம் தான் இந்தியன்.

இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் சுகன்யாவை வயதானவர்களாக காட்டுவதற்காக கிரேஸ்தடிக் மேக்கப் என்னும் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த மேக்கப் தொழில்நுட்பம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் இந்த படத்திற்கு தான் பயன்படுத்தபட்டிருக்கும்.

ஒரே நாளில் வெளியாகும் 8 தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ!

6. விருமாண்டி

இந்த படத்தின் கதை,திரைக்கதை, தயாரிப்பு என அனைத்தும் கமல் இயக்கத்தில் உருவான படம் தான் விருமாண்டி. இந்த படத்தில் தான் முழுக்க முழுக்க லைவ் ரெகார்டிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...