டிவி சீரியல் நடிகரை 2வது திருமணம் செய்த பிக்பாஸ் 2 போட்டியாளர்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரும், பிரபல பாடகியும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணர் அவரகளின் பேத்தியுமான ரம்யா, ஏற்கனவே திருமணமாகி கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்த நிலையில் தற்போது பிரபல டிவி சீரியல் நடிகரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

2eb1b03bd247475d56cea0bacd61da2b

டிவி சீரியல்களில் கதாநாயகனாக நடித்து வரும் சத்யா என்பவருக்கும் பாடகி ரம்யாவுக்கும் நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் இருவீட்டார் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற மும்தாஜ், ஜனனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.”,

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான, ‘பந்தயம்’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான கே.ரம்யா அதன்பின்னர் வேட்டைக்காரன், யான், பிரியாணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews