விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு


9c091e49001a6db502686f60a94c659e

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கணியன் பூங்குன்றனார் என்ற துப்பறிவாளர் கேரக்டரில் வித்தியாசமான நடிப்பை விஷால் வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகமான ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஷாலுடன் நந்தா, பிரசன்னா, உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் கௌதமி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்

நீரவ்ஷா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை முடித்தவுடன் விஷால், ‘சக்ரா’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கும் இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக ஷராதா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கவுள்ளனர். இந்த படத்தையும் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கவுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...