தொடர்ந்து 100 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய எம்.ஜி.ஆர் படம்!

1950, 60களில் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் நடிகர் எம்ஜிஆர் என்பது அனைத்து ரசிகர்களும் அறிந்த உண்மை. பல வருடங்கள் நாடகங்களில் நடித்து வந்த எம்ஜிஆருக்கு தொடர்ந்து பத்து ஆண்டுகள் முயற்சிக்குப் பின்னரே படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை கிடைத்த சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். அவர் தனக்கென்று ஒரு காலம் வரும் என்று அதுவரை நம்பிக்கையுடன் காத்திருந்தார்.

அதன் பின் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் கதாநாயகனாக நடித்து அதன் பின் நாடோடி மன்னன் என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் முன்னணி ஹீரோவாக மாறினார் எம்ஜிஆர்.

சினிமாவின் துவக்க காலத்தில் பல சரித்திர கதைகளில் எம்ஜிஆர் நடித்து வந்துள்ளார். அதுவே மக்களிடம் அவர் பிரபலம் அடைய முக்கியமான காரணமாக இருந்துள்ளது. அதிலும் வேகமாக கையை சுழற்றி எம்.ஜி.ஆர் போடும் வால் சண்டைக்கு பல ரசிகர்கள் அடிமையாகவே மாறினார். முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து எம்ஜிஆர் அவ்வபோது வசனங்கள் மற்றும் சோகம், சென்டிமென்ட் நிறைந்த காட்சிகள் கொண்ட குடும்பப்பாங்கான படங்களிலும் நடித்து வந்துள்ளார்.

ஆனால் எம்.ஜி.ஆர் மாஸ் ஹீரோவாக உருவாகி வந்த காலம் என்பதால் சென்டிமெண்ட் படங்களை விட ஆக்சன் படங்கள், வசனம் சார்ந்தது, தத்துவங்கள் எடுத்துக் கூறும் படங்களில் அதிகமாக நடிக்க தொடங்கினார். அந்த வகையில் 1972ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் இதயவீணை.இந்த படத்தில் எம்ஜிஆர், சிவக்குமார், நம்பியார், மஞ்சுளா என பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

அந்தக் காலத்திலேயே இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துள்ளது. அந்த நேரத்தில் எம்ஜிஆர் அங்கு இருக்கும் குளிருக்கு ஏற்றார் போல் தனது உடை மற்றும் அணிகலன்களை மாற்றி புதுவிதமான முறையில் அணிந்து வந்துள்ளார். வழக்கமான ஆடைகளை விட புதிய வண்ண ஆடைகள், கூலிங் கிளாஸ் தலையில் தொப்பி என பல மாற்றங்களை படத்தில் கொண்டு வந்துள்ளார் எம்ஜிஆர்.

20 வயதிற்கு முன்பாகவே படத்தில் ஹீரோவாக மாஸ் காட்டிய முன்னணி 5 டாப் ஹீரோக்கள்

புது முயற்சியில் உருவாக்கப்பட்ட இதயவீணை திரைப்படம் சென்னையில் மட்டுமில்லாமல் பல இடங்களில் வெற்றி நடை போடத் துவங்கியது. இந்த படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் தொடர்ந்து 100 நாட்களுக்கு மேலாக ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி சாதனை படைத்துள்ளது. அதிலும் குறிப்பாக மதுரையில் சில தியேட்டர்களிலும், திருச்சியில் பேலன்ஸ் தியேட்டர் மற்றும் கோவையில் இரண்டு தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேலாகவே ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வசூல் சாதனை செய்துள்ளது.

எம்ஜிஆரின் திரை வாழ்க்கையில் இதயவீணை திரைப்படம் செய்த சாதனை மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews