ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வெச்ச காமெடியால்.. வடிவேலுவின் வீடு தேடி கோபத்துடன் வந்த கும்பல்.. காரணம் என்ன..

பிரபல கமர்சியல் மற்றும் காமெடி கலந்த திரைப்படங்களை சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்து வருபவர் இயக்குனர் சுந்தர் சி. இவரிடம் பல திரைப்படங்களில் அசிஸ்டன்ட் இயக்குனராக இருந்து மூவேந்தர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் சுராஜ். தனது ஆசான் சுந்தர். சியை போலவே இவரது திரைப்படங்களிலும் காமெடி காட்சிகள் மிக அற்புதமாக இருக்கும்.

அதிலும் சுராஜ் மற்றும் வடிவேலு காம்போவில் உருவாகியிருந்த பல்வேறு காமெடிகள் இன்று வரையிலும் ரசிகர்களை தொடர்ந்து சிரிக்க வைக்கும் அளவுக்கு அமைந்திருக்கிறது. மேலும் இவர்களின் கூட்டணியில் தலைநகரம், மருதமலை, கத்திச்சண்டை, நாய் சேகர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தது.

அதிலும் தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்ற வடிவேலுவின் கதாபாத்திரம் இன்றும் மீம் டெம்ப்ளேட் ஆகவும் பல சமூக வலைத்தளங்களில் நம்மளால் பார்க்க முடிகிறது. இதேபோல மருதமலையில் வரும் ஏட்டு ஏகாம்பரம் என்ற கதாபாத்திரத்தையும் மிஞ்ச யாருமே கிடையாது. மேலும் சமீபத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்திருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தையும் சுராஜ் தான் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வடிவேலு மற்றும் சுராஜ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகிய ஒரு காமெடி காட்சியால் வைகைப்புயலின் வீட்டிற்கு பலரும் சூழ்ந்து வந்து எதிர்ப்பு தெரிவித்த தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அர்ஜுன் நடிப்பில் உருவான மருதமலை படத்தில் ஏட்டு ஏகாம்பரம் என்ற காமெடி கான்ஸ்டபிள் ஆக வடிவேலு நடித்திருப்பார். இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் மாமூல் வசூலிக்க போகும் கான்ஸ்டபிள் வடிவேலு, அங்கே வரும் ஒரு பிச்சைக்காரருடன் போட்டி போட்டு பணம் வசூலிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும்.

இந்த காட்சியில் ஒரு போலீஸ் அதிகாரியை பிச்சைக்காரருடன் ஒப்பிட்டு பிச்சை எடுப்பது போன்று சுராஜ் வைத்திருந்த நிலையில் ரசிகர்கள் ஒரு பக்கம் இந்த செயலுக்கு விழுந்து விழுந்து சிரித்தாலும் பலர் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது.

இதனால் வடிவேலுவின் அலுவலகத்திற்கு ஏராளமானோர் குவிந்ததுடன் போலீசை இப்படி மோசமாக காட்டலாமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு வடிவேலுவும் அது இயக்குனருடைய ஐடியா தான் என்று கூற அந்த இடமே பரபரப்பானதாக தெரிகிறது. இது பற்றி வடிவேலுவுடன் பேசி இருந்த இயக்குனர் சுராஜ், படத்தில் ஒரு நல்ல போலீசை பற்றி காட்டும் போது கெட்ட போலீஸ் எப்படி இருப்பார் என்பதை நாம் காட்ட வேண்டும் என்று கூறி சமரசம் செய்துள்ளார்.

மேலும் இந்த காட்சியை பற்றி பல போலீசாரிடம் சுராஜ் பேசிய போது அவர்களும் திரைப்படம் தானே என்று கூறி பெரிதாக கண்டு கொள்ளவில்லை என ஒரு பேட்டி ஒன்றில் இயக்குனர் சுராஜ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...