சினிமாவுல ஒருத்தர் கூட சப்போர்ட் பண்ணல.. புலம்பித் தீர்த்த ரஞ்சனா நாச்சியார்

சமீபத்தில் பேருந்து படிக்கட்டில் தொங்கிபடி சென்ற மாணவர்களைத் தாக்கியதாக நடிகை ரஞ்சனா நாச்சியாரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவ காவல்துறை தன் அதிகாரத்தைக் கையில் எடுத்தது.

சென்னை குன்றக்குடி-கெருகம்பாக்கம் அருகே பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்ய பேருந்தின் பின்னால் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை நிறுத்தி ஆவேசமாகப் பேசத் தொடங்கினார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்து சில மாணவர்களை தாக்க பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும், பயணிகள் பதறிப் போயினர்.

மாணவர்கள் நலனில் அக்கறை இருந்தால் அறிவுரை கூற வேண்டும். இப்படி அடிக்கக் கூடாது என்று அவருக்கு எதிராக பல கண்டனக் குரல்கள் வலுக்க பரபரப்பு செய்தியானார் ரஞ்சனா நாச்சியார்.

பா.ஜ.க நிர்வாகியும், சட்டம் பயின்றவருமான ரஞ்சனா நாச்சியார் மீது பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் புகார் கொடுக்க காவல் துறை அவரைக் கைது செய்தது. அவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசுப் பேருந்தை நிறுத்தியது, மாணவர்களை அடித்தது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது போன்ற பல்வேறு பிரிவுகளின் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

Ranjana

பிரதீப் ஆண்டனி பஞ்சாயத்தை திசை திருப்ப.. பிக் பாஸ் போட்டியாளர்களிடம் சண்டையை மூட்டி விடும் பிக் பாஸ்!

பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தும் போது நீதிபதியிடம் பொதுச் சேவை அடிப்படையில் ஒரு தாய் தன் பிள்ளையை எப்படி கண்டிப்பாரோ அதேபோல்தான் மாணவர்களைக் கண்டித்ததாகவும் அவர் கூற அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டதாகத் தெரிகிறது. தற்போது இவர் மாங்காடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் கையெழுத்திட்டு திரும்பும்போது அளித்த பேட்டியில் தான் பா.ஜ.கவைச்  சேர்ந்ததால் கைதானதாகவும், நான் நடிகையாக இருந்த போதும் என் கைதுக்கு சக திரையுலகப் பிரமுகர்கள் ஒருவர் கூட எனக்கு ஆதரவாக இல்லை என்றும், நடிகர் சங்கமும் எனக்கு குரல் கொடுக்கவில்லை என்றும் ஆதங்கமாகப் பேசியிருக்கிறார். மேலும் தான் மாணவர்களை அடித்தது தவறு என்றும் கூறியிருக்கிறார்.

துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக அறிமுகமான ரஞ்சனா நாச்சியார் இரும்புத்திரை, அண்ணாத்த, டைரி, நட்பே துணை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...