வெங்காயம் கெட்டுப்போகாமல் மற்றும் முளைக்காமால் இருக்க என்ன செய்யனும் தெரியுமா?

சமையல் பொருள்களில் மிக அத்தியாவசியமான பொருள் என்றால் அது வெங்காயம் .இதனை காசு கொடுத்து வாங்கி வீடுகளில் சேமித்து வைத்தால் சில நாட்களுக்குள்ளே கெட்டுப் போய்விடும் இல்லையென்றால் முளைத்து விடும்.

இந்த பிரச்சனைகள் இருந்து விடுபட என்ன செய்யணும்னு தெரியுமா வாங்க பார்க்கலாம் .

இந்திய சமையலில் ஒரு முக்கிய அங்கமாக தான் வெங்காயம் இருந்து வருகிறது.நாம் எவ்வளவுதான் பார்த்து பார்த்து வைத்தாலும் வெங்காயம் சீக்கிரமாக கெட்டுப் போய்விடும், இனி இந்த தொல்லை இருக்காது.

கோடை காலத்தில் வெங்காயம் முளைப்பதை தடுக்க அவற்றை குளிர்ந்த உலர்ந்த மற்றும் நன்கு காற்றோட்டமான இடத்தில் சேமித்து வைக்கவும். இதற்காக வெங்காயத்தை குளிர்ந்த இடத்தில் பரப்பி காகிதத்துடன் மூடி வைப்பதில் நல்லது என்று சொல்லப்படுகிறது.

இதனால் வெங்காயம் சீக்கிரம் முளைக்காமால் இருக்க தான் நாம் அனைவரும் வெங்காயத்தை சணல் சாக்கில் வைத்து விற்பனை செய்வதை பார்த்திருப்போம். வெங்காயத்தை சேமிக்க சணல் சாக்கு சிறந்தது என்று சொல்லப்படுகிறது

சாக்குப்பையை சமதளத்தில் பரப்பி அதன் மேல் வெங்காயத்தை வைத்துக் கொள்ளலாம் இவ்வாறு செய்வதால் வெங்காயம் கெட்டுப்போகாது என்று கருதப்படுகிறது.

ஆரோக்கியத்துக்கு ஆப்பு வைக்கும் சில அன்றாட பழக்கங்கள்! என்னென்ன அவை என தெரியுமா?

மேலும் வெங்காயத்தை உருளைக்கிழங்கு சிட்ரஸ் பழங்களோடு சேமித்து வைக்கக் கூடாது அப்படி சேமித்து வைத்தால் வெங்காயம் சீக்கிரமாக முளைத்து விடும் இதனைத் தொடர்ந்து வெங்காயத்தை குளிர்சாதன பெட்டிகளோ பிளாஸ்டிக் பைகளை சேமிக்க கூடாது. அதன் காரணம் இது வெப்பத்தை உருவாக்கி வெங்காயத்தை விரைவில் கெட்டுப்போக செய்யும் என்று கூறப்படுகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...