ஆரோக்கியத்துக்கு ஆப்பு வைக்கும் சில அன்றாட பழக்கங்கள்! என்னென்ன அவை என தெரியுமா?

நாம் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலேயோ சில பழக்கங்களை அன்றாடம் செய்து வருகிறோம். ஆனால் அவை ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக இருப்பதால் அவற்றை கண்டறிந்து உடனே மாற்றுவது அவசியம்.

மதிய உணவு இரவு சாப்பிட உடனே படுத்து தூங்குவது நம்மில் சில பேருக்கு பழக்கம் ,ஆனால் இப்படி செய்வது செரிமான சிக்கல்களை ஏற்படுத்தி வயிற்றில் கொலஸ்ட்ரால் தேங்க காரணமாக அமைந்து தொப்பை உருவாக வழி வகுக்கிறது.

அடுத்ததாக வேலை செய்யும் போது போர் அடிக்கும் போது என பொழுது போக்க காதுகளில் ஹெட்போன்ஸ் அணிந்திருப்பது காது ஜவ்வுகள் பாதிக்கப்பட்டு காது கேளாமை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

காலையில் உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பதற்காக இரவு தூங்கப் போகும் முன் கடமைக்கு உடற்பயிற்சி செய்துவிட்டு உடனடியாக தூங்க சென்றாள், அது தீவிர அஜீரண கோளாறுகள் ஏற்படக்கூடும் .

மேலும் கட்டிலில் தலை குப்புற படுப்பதால் கழுத்து எலும்புகளின் அழுத்தம் அதிகரித்து கழுத்து வலி முதுகு வலி மற்றும் சதை பிடிப்பு பாதிப்புகள் ஏற்படும்.

தினமும் காலையில் அதிகமான டூத் பேஸ்ட் உபயோகிப்பது நீண்ட நேரம் பல் துலக்குவது எனாமல் சிதைவை ஏற்படுத்தும் என்பதால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பல்துலக்குவதை தவிர்க்க வேண்டும்.

டீ காபி குடித்த பின்னர் உடனடியாக தண்ணீர் குடிப்பது வயிற்று உபாதைக்கு வழி வகுக்கும் ,அதேநேரம் டீ மற்றும் காபி குடிப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது.

வீடியோக்களுக்கு லைக் செய்தால் பணம் வரும் ! விடியவிடிய லைக் செய்து ஏமாந்து போன ஆசாமி!

சிலர் அடிக்கடி கைவிரல்களில் சொடக்கு உடைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த பழக்கத்தினால் நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது .

பணத்தாள்களை எண்ணும் போது மற்றும் புத்தகத்தாள்களை திருப்பும் போது எச்சில் தொடுவது பலருக்கும் பழக்கம் இதனால் கிருமிகள் பரவி பல்வேறு விதமான நோய்கள் பரவும் என்பதை கருத்தில் கொண்டு சுகாதாரமான நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.