சிவகார்த்திகேயன் செய்த காரியம்… ரசிகர்கள் நெகிழ்ச்சி…

வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக இவர் படங்கள் கலக்கி கொண்டிருக்கிறது. மேலும் இவரது படங்கள் வணீக ரீதியாகவும் கலேக்ஷன்களை அள்ளியுள்ளது.

கடந்த பொங்கலை முன்னிட்டு நடிகர் சிவகார்திகேயனனின் ‘அயலான் ‘ படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. குழந்தைகள் இப்படத்தை மிகவும் விரும்பி பார்த்தனர். குழந்தை ரசிகர்களை அதிகம் கொண்ட நடிகர் என்றால் அது நடிகர் சிவகார்த்திகேயன் தான். அவரது முக பாவனை, பாடி லேங்குவேஜ் குழந்தைகளை கவரும் வகையில் இருக்கும். அது மட்டுமல்லாமல் பெண்கள் ஆதரவும் இவருக்கு உண்டு.

அதற்கு அடுத்தபடியாக நடிகர் சிவகார்த்திகேயனின் 21 வது படமான ‘அமரன்’ திரைப்படத்தை உலகநாயகன் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ப்ரொடெக்ஷன் கம்பெனி தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஜி. வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ கமாண்டோவாக நடித்துள்ள இப்படத்தை நெட்பிளிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், என் சினிமா வாழ்க்கை ஆரம்பித்ததில் இருந்து நிறைய பிரச்சனைகள், வலி, வேதனையை அனுபவித்து இருக்கிறேன். சில பிரச்சனைகள் உங்களுக்கு தெரியும் ஆனால் உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது. பிரச்சனைகள் வரும் போது எனக்கு பக்கபலமாக தோள்கொடுக்க அப்பாவும் இல்லை, அண்ணனும் இல்லை.

ஆனால் இப்போ என்னுடைய பேன்ஸ் ஆன நீங்க எல்லாரும் எனக்கு ப்ரதேர்ஸ் அண்ட் ஸிஸ்டர்ஸா இருக்கீங்க. அவ்வளவு ஆதரவு எனக்கு குடுக்கிறீங்க. எதை பத்தியும் யோசிக்காதீங்க, உங்களுக்காக நான் இருப்பேன் என்று கூறினார். பின்பு அங்கிருந்து கிளம்பும் போது தன்னை பார்த்து கையசைத்த ரசிகர்களிடம் எல்லாரும் சாப்பிட்டிங்களா என்று கேட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...