4K டெக்னாலஜியில் ரீ-ரிலீஸ் ஆகும் விஜய்யின் மெகா ஹிட் படம்..கொண்டாடத் தயாரான தளபதி ரசிகர்கள்

தற்போது பழைய படங்கள் அனைத்தும் நவீன டெக்னாலஜியில் நன்கு மேம்படுத்தப்பட்டு மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் புதுப் படங்களைப் போல மீண்டும் வெற்றி பெறுகிறது. அந்தப் படங்களை எத்தனை முறை நாம் டிவியில் பார்த்தாலும் மீண்டும் தியேட்டரில் அதுவும் மெருகூட்டப்பட்டு தற்போது உள்ள டெக்னாலஜியில் பார்க்கும் போது பழைய பதிப்பைக் காட்டிலும் ஒருபடி மேலே போய் ரசிகர்களை மகிழ்விக்கிறது.

சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த மாளிகை, சிவந்த மண் எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன், கமல்ஹாசனின் ஆளவந்தான், விருமாண்டி, ரஜினியின் பாட்ஷா, சந்திரமுகி, பாபா, செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த லிஸ்ட்டில் தற்போது தளபதி விஜய்யும் இணைந்துள்ளார்.

சரியாக இருபது வருடங்களுக்கு முன்னர் அதாவது கடந்த 2004-ல் வெளிவந்த படம்தான் கில்லி. விஜய்யின் கேரியரை மாற்றிய படம். தரணி இயக்கத்தில், வித்யாசாகர் இசையில், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் அப்போது பெரும் வெற்றி பெற்றது. பக்கா கமர்ஷியல் பட இயக்குநரான தரணி தில், தூள் வெற்றிக்குப் பின் இந்தப் படத்தினை இயக்கினார்.

புரோட்டாகாலை மீறி சிவாஜியை சந்தித்த பிரபலங்கள்.. நடிகர் திலகம் இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரரா?

இதில் வேலுவாக படம் முழுக்க விஜய் கபளீகரம் செய்திருந்தார். பிரகாஷ்ராஜ் ‘செல்லம்‘ என்று சொல்லும் அந்த ஸ்லாங்கே படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணையாக இருந்தது. ஆக்சன், சென்ட்டிமெண்ட், காமெடி, காதல், பாடல்கள் என அனைத்து ஏரியாவிலும் கில்லி சுழன்றி அடித்தது. அதற்கு முன்னர் விஜய்யின் வெற்றிப் படங்களான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ் போன்ற படங்களின் வசூலை முந்தி விஜய்யை சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாற்றியது.

இந்தப் படத்திற்குப் பின்னர்தான் விஜய்க்கு அதிக அளவில் இளைஞர் பட்டாளம் இரசிகர்களாக உருவெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கில்லி படம் வெளியாகி 20 ஆண்டுகளைக் கடந்த நிலையில் ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் கில்லி 4K தரத்தில் மீண்டும் திரையரங்குகளை ஆக்கிரமிக்க உள்ளது. தற்போது THE GOAT படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கும் விஜய் அரசியல் களத்திலும் தடம் பதித்துள்ளார். எனவே மீண்டும் தற்போதுள்ள இளைஞர்களைக் குறிவைத்து கில்லி படம் வெளியாவதால் விஜய்க்கு இது மேலும் பிளஸ் ஆக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...