விஜய்சேதுபதிக்கு என்ன ஆச்சு? ஆளே இப்படி மாறிட்டாரே.. ஃபீல் பண்ணும் ரசிகர்கள்..!

மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் விஜய்சேதுபதி வில்லன் வேடத்தில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், கடைசி விவசாயி, மாமனிதன் என ஹீரோவாக நடிக்கும் படங்களிலும் கவனம் ஈர்த்து வருகிறார்.

பெரிய பட்ஜெட் படங்களில் தான் நடிப்பேன் என்றும் பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்றும் மற்ற நடிகர்கள் போல அடம் பிடிப்பதில்லை. அதனால் தான் சிறு பட்ஜெட் படங்களில் இருந்து ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வரை சர்வ சாதாரணமாக நடித்து வருகிறார்.

F8fX5T3bkAAWNE1

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி:

சீனு ராமசாமி படத்திற்கும், ஷாருக்கான் படத்திற்கும் எந்த ஒரு வேறுபாடும் இன்றி அந்த படத்திற்கு தேவையான சம்பளத்தை வாங்கிக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவதாகவும், ஹீரோவாக நடிக்கும் படங்கள் வசூலை குவிப்பது இல்லை என்கிற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. ஆனாலும், தொடர்ந்து ஹீரோவாகவும் பெரிய நடிகர்கள் படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

வித்தியாசமான லுக்:

உடல் எடை அதிகமாக இருந்த நிலையில் ஒரே மாதிரியான தோற்றத்திலேயே நடித்து வந்தது விஜய் சேதுபதி, தற்போது திடீரென தனது உடல் எடையை சற்றே குறைத்துள்ளது நிலையில் வித்தியாசமாக நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு என்ன ஆயிற்று? மனுஷன் நல்லா தானே இருந்தார் என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இயக்குனர் அமீர் தனது இரண்டாவது உணவகத்தை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தொடங்கியுள்ள நிலையில் லா காஃப்பே என பெயரிடப்பட்டுள்ள அந்த உணவகத்தை திறந்து வைக்க நடிகர் விஜய்சேதுபதியும் சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டியும் பங்கேற்று ரிப்பன் கட் செய்து உணவகத்தை தொடங்கி வைத்திருந்தனர்.

ஆள் அடையாளமே தெரியல:

கண்ணாடி போட்டுக்கொண்டு மீசையை ரொம்பவே ஷார்ட்டாக நறுங்கிக் கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அடுத்ததாக மகாராஜா எனும் படத்தில் விஜய் சேதுபதி நடித்த ஒரு நிலையில் அந்தப் படத்திற்கான லுக் தானா இது? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெறித்தனமான லுக்கில் விஜய் சேதுபதி இருந்த நிலையில் தற்போது ஆள் அடையாளமே தெரியாதபடி மாறி உள்ளாரே என திரையுலகப் பிரபலங்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை விஜய் சேதுபதியின் புதிய தோற்றத்திற்கான காரணத்தை யூகித்து வருகின்றனர். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் நடித்து வரும் விடுதலை 2 படத்தில் விஜய்சேதுபதியின் பீரியட் போர்ஷன் லுக்கா? இது என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

பாலிவுட்டில் பிஸி:

மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டுக்கு சென்ற விஜய் சேதுபதி கத்ரினா கைஃப் உடன் மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் ஷாருக்கானின் ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில், மெர்ரி கிறிஸ்துமஸ் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் 1100 கோடியை தாண்டிய நிலையில், அந்த படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு ஏகப்பட்ட பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.