வெறும் 24 மணி நேரத்திலேயே ஜெயிலர் சாதனையை முறியடித்த லியோ.. பெரிய சாதனைக்கு தயாராகும் விஜய்..!

லியோ ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திலேயே 3 கோடி பார்வையாளர்களைக் கடந்து ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரைலர் ரெக்கார்டை முறியடித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பான் இந்திய அளவில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் வருகிற அக்டோபர் 19 தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் டிரைலர் அக்டோபர் 5ம் தேதி அதாவது நேற்று மாலை 6:30 மணிக்கு சமூக வலைதளங்களில் ஒன்றான யூடிப்தளத்தில் வெளியிடப்பட்டது.

வெளியான ஒரு நிமிடத்திலேயே 100k அதாவது ஒரு லட்சம் லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்தது. இப்படி வெளியான ஒரு மணி நேரத்திலேயே 37 லட்சம் பார்வையாளர்களையும் 14 லட்சம் லைக்குகளையும் பெற்று சாதனை படைத்திருந்தது. இதுதான் தற்பொழுது புதிய ரெக்கார்டாக உருவாகியுள்ளது. முன்னதாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் திரைப்படத்தின் டிரைலர் ரெக்கார்டை முறியடித்துள்ளது. அதாவது அப்படத்தின் ட்ரெய்லர் இதுவரையுலும் 3 கோடி பார்வையாளர்களையும் கிட்டத்தட்ட 9 லட்சம் லைக்குகளையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் லியோ படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதாவது 19 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து ரெக்கார்டுகளையும் பிரேக் செய்து புதிய ரெக்கார்டை உருவாக்கியுள்ளது. இதற்கு முன் இதே லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகியிருந்த மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் 7.5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்தது தமிழ் சினிமா வரலாற்றில் அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்ட டிரைலராக யூடியூப் தளத்தில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

‘உங்களுக்கு போட்டியே நீங்கதாங்க’ என்று விஜய் சொன்னது போல அவருடைய மாஸ்டர் படத்தின் ரெக்கார்டை லியோ படத்தின் மூலம் முறியடித்து அவருக்கு போட்டியாளர் அவரே என்று நிரூபிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுவரையிலும் 47 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து செல்கிறது லியோ ட்டிரைலர்.

அது மட்டும் இல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம் என அனைத்துவித மொழிகளிலும் படங்கள் 1000கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆனால் இதுவரை தமிழ் சினிமாவில் அது போல ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. தமிழ் சினிமாவில் பொறுத்தவரை ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் சுமார் 600 கோடி தான் அதிகபட்ச வசூலாகும். லியோ திரைப்படம் அதனை முறியடித்து ஆயிரம் கோடி என்ற புதிய வசூல் சாதனை புரிந்து விஜய்க்கு நிகர் விஜய் தான் என்று நிரூபிப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...