பிற ஆண்களுடன் உறவு கொள்ள வற்புறுத்திய மாமியார்.. பிளேடால் மருமகளை காயப்படுத்தி கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்..!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மருமகளை பிற ஆண்களுடன் உறவு கொள்ள மாமியார் வற்புறுத்தியதாகவும் அதற்கு மருமகள் உடன்படாததால் பிளேடால் கீறியதாகவும், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் இளம் பெண் ஒருவர் தனது தந்தையுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு அலோக் உமாபதி என்பவர் உடன் திருமணம் நடந்ததாகவும், திருமணம் நடந்த சில நாட்களிலேயே தனது மாமியார் தன்னை பிற ஆண்களுடன் உறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், அதற்கு தான் மறுத்த நிலையில் பிளேடால் தாக்கப்பட்டதாகவும் இதன் விளைவாக தனது தோள்பட்டையில் தையல் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கணவரின் சகோதரி தனது ஆடைகளை எல்லாம் எடுத்து வைத்து கொண்டதாகவும் ஒரு அறையில் மட்டுமே தான் பூட்டப்பட்டு இருக்கும் நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாக ஒரே ஆடையை அணிந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் தனக்கு ஒரு மகன் பிறந்த பிறகு தன்னுடைய நிலைமை மிகவும் மோசமாகி விட்டதாகவும் தனது கணவர் மற்றும் மாமியார் ஆகிய இருவரும் மாறி மாறி உடல் ரீதியாக தாக்குதல் நடத்தியதாகவும் இதனை அடுத்து வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தனது நிலையை கேட்டு தனது தந்தை தான் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார் என்றும் தனது கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...