இந்த முகம் ஹீரோவுக்கு செட்டே ஆகாது… தவறான சிவாஜியின் கணிப்பு !

தமிழ் மக்களால் நடிகர் திலகம் என்று அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகர் சிவாஜி . இவருக்கு நடிப்பின் நாயகன், நடிப்பின் பல்கலைக்கழகம் என இவருக்கு பல பெயர்கள் இருக்கிறது. உண்மையான நடிப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சிவாஜியின் படங்களை பார்த்து தெரிந்து கொள்ளும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை காட்டக்கூடியவர். அந்த வகையில் இவருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தவித்த காலங்களும் இருக்கிறது. அந்த அளவிற்கு அவரது நடிப்பு திறமை இருக்கும். சில சினிமா பிரபலம் அவருடன் இணைந்து நடிக்க முடியா விட்டாலும் அவரது நடிப்பை நேரிலாவது பார்க்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டுள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால் பலருக்கு நடிக்க வேண்டும் என்று ஆசையை தூண்டிவிடும் அளவிற்கு மிகவும் தத்ரூபமாக பல படங்களில் நடித்திருப்பார். இப்படி நடிப்பில் ராட்சசன் ஆக இருக்கும் இவருடைய மகன் பிரபுவை சினிமாவில் நடிக்க வைக்க விருப்பம் இல்லை. அதற்கு காரணம் தன் மகனுக்கு நடிப்பு சுட்டு போட்டாலும் வராது என தவறாக நினைத்துள்ளார். மேலும் ஹீரோவாக நடிப்பதற்கு ஏற்ற முகம் இவனிடம் இல்லை என்றும் நடிக்க விடாமல் தடுத்து இருக்கிறார் சிவாஜி.

இந்த நிலையில் வீட்டில் உள்ளவர்களிடம் மட்டும் அனுமதி பெற்று பிரபு ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கினர் பிரபு. சிறது காலம் கழித்து கங்கை அமரன் சிவாஜி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று தனது படங்களில் பிரபுவை நடிக்க வைக்க அனுமதி வழங்குமாறு கூறியுள்ளார். அதற்கு சிவாஜி தன்மகனை பார்த்து இந்த தடியனுக்கு நடிப்பு சுத்தமாக வராது என்றும், ஆனால் பிரபுவுக்கு ஆர்வம் இருந்ததால் மட்டுமே கங்கை அமரனின் கதையை சிவாஜி ஒத்துக்கொண்டார்.

அப்படி கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு அவர்கள் நடித்த படம் தான் கோழி கூவுது. இப்படம் யாரும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படத்தை பார்த்து சிவாஜி தன் மகனை தவறாக நினைத்து விட்டேன் என வருத்தப்பட்டதாகவும், பின்னர் என்னுடைய ரத்தம் ஓடுது, அதனால் நடிப்பு என்னை மாதிரி தான் இருக்கும் என பிரபுவை நினைத்து பெருமை அடைந்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து பிரபு நடித்த படம் அதிசய பிறவிகள், சின்னஞ்சிறுசுகள் என அடுத்தடுத்து நடித்த அனைத்து மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் ஆகி தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு பிரபுவை எடுத்து சென்றது. அதன் பின்னரே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற பெயர் போல இவருக்கு இளைய திலகம் பிரபு என்று ரசிகர்கள் பெயர் சூட்டினார்கள்.

1982ஆம் ஆண்டு பிரபுவிற்கு திருமணம் நடந்தது. பிரபிவிற்கு திருமணம் முடிந்த பின்னர் தான் அவரை சினிமாவிற்கு குடும்பத்தினர் நடிக்க அனுப்பி வைத்தனர் என்பது தனி தகவல். இது பற்றி பேட்டி ஒன்றில், “என்னுடைய மனைவி வந்த அதிர்ஷ்டமா என்று தெரியவில்லை, பிப்ரவரி 26ஆம் தேதி என்னுடைய முதல் படமான சங்கிலி படத்தின் சூட்டிங் அருணாச்சலம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அப்பா சிவாஜியுடன் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நான் நடித்தேன்.

இந்த படத்தில் அப்பா சிவாஜி டிஎஸ்பியாக நடித்தார், இந்த படத்தின் மூலமாகத்தான் என்னை சீவி ராஜன் அவர்கள் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அவரை அண்ணன் என்று பாசமாக அழைப்பேன் என் வளர்ச்சியின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். இன்று நான் ஒரு நடிகராக இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் அண்ணன் சிபி ராஜன் அவர்கள் தான்.

அதை தொடர்ந்து சங்கிலி படத்திற்கு பின்னர் 1984-ல் வம்ச விளக்கு என்ற படத்தில் நானும் அப்பாவும் இணைந்து நடித்தது மறக்க முடியாத நினைவுகள்” என பிரபு தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...