குழந்தைகளுக்கு இதனால் தான் மாரடைப்பை ஏற்படுகிறது! அதிர்ச்சி பதிவு !

தற்போது நாம் வாழும் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை தான் பலவிதமான நோய்களுக்கு காரணமாக அமைகிறது. குறிப்பாக பாஸ்ட் பூட் மற்றும் பல்வேறு விதமான பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் தான் நோய்கள் அதிகம் ஏற்படுகிறது.

ஆனால் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு இந்த உணவை கொடுத்து சாப்பிடுவதற்கு பழக்கப்படுத்துவது தான் பெற்றோர்கள் செய்யும் மிக பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் உணவுப்பழக்கம் மட்டும் இல்லை. இக்காலத்தில் மழலை குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதில்லை, ஆன்லைனில் கேம்ஸ் விளையாடுவதில்தான் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தினமும் ஒரு அரை மணி நேரம் கூட ஓடி ஓடி விளையாடுவதும் இல்லை, வீட்டு உணவுகளை சாப்பிடுவதில்லை. வெளி உணவுகளை தான் அதிகம் சாப்பிடுகிறார்கள்.

வெளி உணவுகளில் அதிக கொழுப்பு, அதிக கார்போஹைட்ரேட் உள்ளது. இந்த உணவுகளை சாப்பிட்டு விளையாடாமல் இருப்பதால் அந்த கொழுப்பு பொருட்கள் வேகமாக கரையாமல் உடலிலேயே தங்கி விடுகிறது. இது உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாக அமைகிறது.

இதனால் மாரடைப்பும் ஏற்படலாம். மேலும் சோர்வு, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சத்துக்கள் குறைந்து மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் எளிதில் ஏற்பட காரணமாகிறது.

கல்யாணத்தில் மணமக்களுக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான பரிசு!

குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் தினமும் ஒரு அரை மணி நேரம் ஏதேனும் ஒரு உடல் ரீதியான விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதற்கு பெற்றோர்கள், கூடவே பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களும் சேர்ந்து உதவ வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு சத்து மிக்க உணவுகளை கேண்டினில் கிடைக்கும் படி செய்ய வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews