கல்யாணத்தில் மணமக்களுக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான பரிசு!

சமூக வலைத்தளங்களில் தினமும் பல வேடிக்கையான திருமண வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமாக இருக்கும். அதேபோல திருமணங்களில் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணின் தோழர்கள் மற்றும் உறவினர்கள் கலாட்டாக்கள் மிக வேடிக்கையாக இருக்கும்.

இவர்கள் மணமக்களை கிண்டல் செய்ய ஒரு வாய்ப்பையும் விட்டு வைப்பதில்லை. இவை சில சமயங்களில் மணமக்களுக்கு பல தர்ம சங்கடங்களையும் ஏற்படுத்துவதுண்டு. தற்போது மணமக்களின் ஒரு பரிதாபமான வீடியோ வெளியாகி உள்ளது.

மணமேடையில் மணமகனும் மணமகளும் நின்று கொண்டிருக்க திருமணத்திற்கு வந்துள்ள விருந்தினர்கள் ஒவ்வொருவராக வந்து அவர்களுக்கு பரிசுகளை அளித்து வருகிறார்கள்.

அப்போது மணமக்களை நண்பர்கள் பல பரிசு அளித்த மேடைக்கு வருகிறார்கள்.இங்கு தான் அந்த வினோதமான நிகழ்ச்சி நடக்கிறது . அப்போது நண்பர்கள் பரிசாக துடைப்பம், வாலி ,டாய்லெட் பிரஷ், ஹார்பிக் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டு பொருட்களை கொடுக்கின்றனர். அவர்கள் அளிக்கும் பரிசுகளை பார்த்து மணமக்களுக்கு ஆச்சரியமும் அதிசயமும் ஏற்படுகிறது.

நடப்பாண்டில் இவ்வளவு ஆபத்துகளா!! பேரழிவு குறித்து திகிலூட்டும் தகவல்

இந்த பரிசுகளை பார்த்த மணமக்கள் மட்டுமல்லாமல் அவர்களது உறவினர்கள் மற்றும் பிற விருந்தாளிகளும் சிரிப்பை அடக்க முடியாமல் மேடையிலேயே சிரித்து மகிழ்கின்றனர். மணமகன் மற்றும் மணமகளின் நண்பர்கள் சிலர் மேடையிலேயே அவர்களுக்கு வழங்கிய பரிசுகளால் தான் இந்த திருமணத்தை வித்தியாசமான திருமணமாக மாற்றிவிட்டது எனவும் , இனி புது ஜோடிகளுக்கு ஷாப்பிங் செய்ய மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என பலர் கமண்ட் அடித்து வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...