3வது t20: தொடரை தக்கவைக்குமா இந்தியா? முதல் வெற்றியை பெறுமா?

தற்போது இந்தியாவிற்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தில் 5- 20 ஓவர் போட்டிகள் உள்ளன. இதில் முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். மேலும் கடந்த ஆட்டத்தில் குறைவான இலக்கை அதிரடியாக ஆடி தென்ஆப்பிரிக்க வீரர் கிளாஸன் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால் அடுத்துள்ள அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் உள்ளது. மேலும் தற்போதுவரை முதல் வெற்றியை இந்திய அணி காணாமலேயே காணப்படுகிறது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி முதல் வெற்றியை பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதன்படி இந்திய-தென்ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான 3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இரு அணிகளும் மோதும் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் இரவு 07:30 மணிக்கு தொடங்குகிறது. இரண்டு போட்டிகளில் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்ற முனைப்போடு விளையாடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே வேளையில் முதல் வெற்றி பெற்று தொடரை தக்கவைக்க இந்திய அணி முயற்சி செய்து கொண்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...