மகாராஜா திரைப்படம் இனி உருவாகும் தமிழ் சினிமாவில் இந்த மாதிரி மாற்றங்களை ஏற்படுத்தும்… நடராஜன் பகிர்வு…

நடராஜன் தென்னிந்திய ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்து வளர்ந்தவர். இவரது முழுப்பெயர் நடராஜன் சுப்பிரமணியன் என்பதாகும். ஒளிப்பதிவாளராக திரையுலகில் அறிமுகமாகி பின்னர் நடிகராக வலம் வந்தவர் நட்ராஜ் எனப்படும் நடராஜன்.

1999 ஆம் ஆண்டு இந்தி குறும்படத்திற்கு முதலில் ஒளிப்பதிவு செய்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் நட்ராஜ். 2002 ஆம் ஆண்டு விஜய் நடித்த யூத் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து தமிழில் அறிமுகமானார். பெரும்பாலும் இந்தி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நட்ராஜ் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு ‘சக்கர வியூகம்’ திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு ‘மிளகா’ திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். இப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்தார் நட்ராஜ். அதிரடி திரைப்படமான ‘மிளகா’ நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

2011 ஆம் ஆண்டு குடும்ப திரைப்படமான ‘முத்துக்கு முத்தாக’, 2014 ஆம் ஆண்டு திரில்லர் திரைப்படமான ‘சதுரங்க வேட்டை’ ஆகிய வெற்றித் திரைப்படங்களில் நடித்தார் நட்ராஜ். ‘சதுரங்க வேட்டை’ படம் மாபெரும் வெற்றிப் பெற்று நட்ராஜ்க்கு திருப்புமுனையாக அமைந்தது. தனது நடிப்பிற்கு மக்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கவே, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘என்கிட்ட மோதாதே’, வால்டர்’, ‘கர்ணன்’ போன்ற வெற்றித் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் நட்ராஜ்.

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் ‘மகாராஜா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நட்ராஜ். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட நட்ராஜ், மகாராஜா படத்தில் நடித்த அனுபவத்தையும் கதையை பற்றியும் பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், மகாராஜா திரைக்கதை இனி வரும் தமிழ் சினிமாவிற்கு வேறு கோணத்திலான குறிப்பையும் மாற்றத்தையும் கண்டிப்பாக கொடுக்கும் என்று கூறியுள்ளார் நட்ராஜ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...