தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!

தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கல் முஹூர்த்தம் கடந்த மாதம் (மார்ச்) 3ம் தேதி நடைபெற்றது.

இன்று சிறப்பு நிகழ்ச்சியாக கொடிமரம் அருகே பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் ஸ்ரீ சந்திரசேகரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் அமைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் (பூஜைகள்) செய்யப்பட்டன.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் மே 1ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.

இலங்கை காவல்படை கைது செய்த தமிழக மீனவர்கள் மீட்பு !

மேலும் கொடியேற்ற விழாவில், அரண்மனை பரம்பரை அறங்காவலர் சிவாஜி ராஜா பான்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews