ரஷீத் கானுக்கு எதிரா எந்த இந்தியா பேட்ஸ்மேனாலும் முடியாத விஷயம்.. முதல் ஆளாக வரலாறு படைத்த சூர்யகுமார்..

டி20 போட்டிகள் என்பது எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு தான் அதிகம் சாதகமாக இருக்கும். ஐபிஎல், பிக்பேஷ் லீக் உள்ளிட்ட பல டி 20 லீக் தொடர்கள் உலக அளவில் நடைபெற்று வருவதால் பலருக்கும் பிடித்தமான கிரிக்கெட் தொடராக டி 20 இருந்து வருகிறது.

மேலும் இதில் இருக்கும் சில விதிகளும் கூட பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால் பந்து வீச்சாளர்கள் அரிதாகவே விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி டி 20 மட்டும் இல்லாமல் சர்வதேச கிரிக்கெட் கண்ட மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்றால் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை சொல்லிவிடலாம்.

உலகின் எப்படிப்பட்ட அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தாலும் ரஷீத் கான் பந்தை எதிர்த்து ஆடி ரன் குவிப்பதே கடினமான விஷயமாக தான் இருக்கும். எந்த நேரத்தில் பந்தை எப்படி திருப்புவார் என்பது புதிராக இருக்கும் சூழலில் அவரது பந்தை எதிர்த்து ஆடி ரன் சேர்க்கும் பேட்ஸ்மேன்கள் அரிதாகவே உள்ளனர். அப்படி ஒரு பேட்ஸ்மேனாக மிக முக்கியமான ஒரு சாதனையை தான் தற்போது இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார்.

சூப்பர் 8 சுற்றில் தங்களின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய கிரிக்கெட் அணி எதிர் கொண்டிருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கோலி, ரோகித், பந்த் உள்ளிட்டோர் அடுத்தடுத்து அவுட்டாக மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் சூர்யகுமார்.

மேலும் இந்த டி20 உலக கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்த அவர், ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார். இதனிடையே இலக்கை நோக்கி ஆடி வந்த ஆப்கானிஸ்தான் அணியால் 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

சூப்பர் 8 சுற்றை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கி உள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்தபோது கோலி, ரிஷப் பந்த் மற்றும் ஷிவம் துபே உள்ளிட்டோர் விக்கெட்டை ரஷீத் கான் வீழ்த்தி இந்திய அணிக்கு குடைச்சல் கொடுத்திருந்தார். ஆனால் இதற்கிடையே களமிறங்கி இருந்த சூர்யகுமார், ரஷீத் கான் ஓவரில் பவுண்டரிகளையும் பறக்க விட்டிருந்தார்.

டி20 போட்டிகளில் இதுவரை ரஷீத் கான் பந்தை எதிர்கொண்டுள்ள சூர்யகுமார், மொத்தமாக 64 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்துள்ளார். ஆனால், இதுவரை ரஷீத் தான் பந்துவீச்சில் அவுட் ஆகாமல் நூறு ரன்னை கடந்த மூன்றாவது வீரர் என்ற சிறப்பையும் சூர்யகுமார் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக ஷார்ட் மற்றும் ஷேன் வாட்சன் இருவருமே ரஷீத் கான் பந்து வீச்சில் ஒருமுறை கூட அவுட் ஆகாமல் அவரை எதிர்த்து டி20 போட்டிகளில் 100 ரன்களைக் கடந்துள்ளனர். இந்த வரிசையில் முதல் இந்திய வீரராக சூர்யகுமார் 100 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...