சூர்யா ஹரி படம் என்ன ஆச்சு? அதிர்ச்சி தகவல்


d65fe3d2537dbd54cb358ec98597fe0b

சூர்யா நடித்து முடித்துள்ள சூரரைப்போற்று படத்தின் படப்பிடிப்பு முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை
பொதுவாக சூர்யா ஒரு படத்தில் நடித்து முடித்தவுடன் ஒரு சில நாட்களிலேயே அடுத்த படத்தை தொடங்கி விடுவார். இந்த முறை இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு கூட வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யாவின் அடுத்த படத்தை ஹரி இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென ஹரி கூறிய திரைக்கதையில் சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை என்றும் இதனால் இந்த படம் கால தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சூரியை வைத்து இயக்கி வரும் படத்தை ஒரே மாதத்தில் முடித்து விடுவார் என்றும் அவருடைய படத்தில் நேரடியாக சூர்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.