சூர்யாவை சுளுக்கெடுத்தாரா பாலா?.. வணங்கானில் இருந்து விலகியது ஏன்?.. சுரேஷ் காமாட்சி விளக்கம்!

பாலா இயக்கிய வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியதை தொடர்ந்து அருண் விஜய் சூர்யாவுக்கு பதில் அப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகியதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது சுரேஷ் காமாட்சி அதை பற்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் பாலா சியான் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. மேலும் சேது படம் பாலா மற்றும் விக்ரமிற்கும் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பாலா, தான் நினைத்தபடி நடிப்பை நடிகர்களிடம் எப்படியாவது வரவழைத்து விடுவார். அதற்காகவே நடிகர்களில் சிலர் பாலா படத்தில் பணிபுரியவே தயங்குவார்கள். மேலும், சிலர் அவர் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட மாட்டோமா என ஏங்கிக் கொண்டும் இருக்கின்றனர். பாலா நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி, நான் கடவுள் போன்ற பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

வணங்கான் படத்தில் இருந்து விலகிய சூர்யா:

நடிகர் சூர்யா சினிமாவில் நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து காதலே நிம்மதி, பூவெல்லாம் கேட்டுப்பார், ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார் ஆனால் எதுவும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அவர் பாலா இயக்கிய நந்தா படத்தில் நடித்திருந்தார், அப்படம் சூர்யாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சூர்யாவை கை கொடுத்து தூக்கிய இயக்குநர்களில் ஒருவராக பாலாவும் இருக்கிறார். சூர்யா அதையடுத்து பாலா இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து பிதாமகன் படத்திலும் நடித்தார், அப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. சூர்யா பேரழகன், கஜினி, ஆறு, காக்க காக்க, வாரணம் ஆயிரம் , சூரரைப் போற்று, ஜெய் பீம் என பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாகவே பாலா நிலை தடுமாற்றத்திலேயே இருந்தது. பாலாவின் மனைவி மலருடனான விவாகரத்து, வர்மா பட சொதப்பல் போன்ற சில மனக் கஷ்டத்தில் இருந்த பாலாவிற்கு மருந்தாக வணங்கான் படம் அமைந்தது, சூர்யா தானே தயாரித்து நடிப்பதாக இருந்தார். ஆனால் திடீரென சூர்யா அந்த படத்தை விட்டு விலகினார். சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் ஹீராவாக நடித்து படப்பிடிப்பும் முடிந்து சில நாட்களுக்கு முன் டீசர் கூட வெளியானது. மேலும் இப்படம் மே மாதம் ரீலிஸாகும் என ஏதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஓடவிட்ட பாலா:

சூர்யா படத்தை விட்டு விலகியது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், சூர்யாவை பாலா அடிக்கவில்லை. ஆனால் அவரை ஒடவிட்டிருக்கலாம் ஏனென்றால் அருண் விஜய் படப்பிடிப்பின் போது ஓடினார். மேலும் சூர்யா தற்போது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் உயரத்திற்கு இந்த கதையில் நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விடும் என பாலாவிடம் சமாதானமாக பேசி தான் விலகினார். அருண் விஜய்க்கு இந்த படம் ஒரு லைஃப் டைம் செட்டில்மெண்ட்டாக இருக்கும் எனக் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...