பாலாவுக்கும் சூர்யாவுக்கும் வணங்கான் படத்தில் பிரச்சனை வர காரணமே அவங்கதான்.. சுரேஷ் காமாட்சி புது விளக்கம்!..

நடிகர் சூர்யா பாலா இயக்கிய வணங்கான் படத்தில் இருந்து விலகியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் சொன்ன விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குனர் பாலாவுடன் இணைந்து சுரேஷ் காமாட்சியும் வணங்கான் படத்தை தயாரித்து வருகிறார். ஆரம்பத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் தான் அந்த படத்தை தயாரிக்க தொடங்கியது. சூர்யா வெளியேறியதும் தயாரிப்பையும் நிறுத்தி விட்டார்.

வணங்கான் பிரச்சனை: 

இயக்குனர் பாலா தனது பயணத்தை தொடங்கிய சேது படம், நடிகர் விக்ரம், சிவகுமார், அபிதா போன்ற பலர் நடிப்பில் உருவாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அந்த படம் பாலாவுக்கும் விக்ரமுக்கும் திரையுலகில் நிலையான இடத்தை பிடித்து தந்தது. அதையடுத்து இரண்டாவது படமாக அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட் கொடுத்தது. சூர்யாவின் நடிப்பு முதன்முதலாக தமிழ் திரையுலகில் பேசப்பட்டது.

முதல் இரண்டு படங்களிலேயே முன்னனி இயக்குனரானார் பாலா. அடுத்தடுத்து அவர் இயக்கிய பிதாமகன், அவன் இவன், நான் கடவுள் உள்ளிட்ட படங்கள் மிகச்சிறந்த படங்களாக அமைந்தன. பாலா தான் எதிர்ப்பார்த்த நடிப்பை வரவழைக்க என்ன சொன்னாலும் நடிகர்கள் செய்வார்கள் என்ற நிலை வந்தது. பாலா படத்தில் ஒரு சீனிலாவது நடித்துவிட மாட்டோமா என நடிகர்கள் ஏங்கியது ஒரு காலம்.

தடுமாறிய பாலா:

ஆனால், சமீப காலமாக சூழ்நிலையே தலைகீழாக மாறிவிட்டது. இயக்குனர் பாலா தனது மனைவி மலர் உடன் விவாகரத்து செய்தது. துருவ் விக்ரமை வைத்து வர்மா படத்தை இயக்கி அசிங்கப்பட்டது போன்ற சில காரணங்களால் அவரது நிலை தடுமாற்றத்தில் உள்ளார்.

மீண்டும் பாலாவை பழைய நிலைமைக்கு கொண்டு வரத்தான் சூர்யா வணங்கான் படத்தில் கமிட் ஆனார். ஆனால் எதிர்பாராத விதமாக வணங்கான் படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். அதற்கான காரணமும் தெரியவில்லை. மேலும், பாலா அந்த படத்தை கைவிடாமல் அருண் விஜய்யை வைத்து வணங்கான் படப்பிடிப்பை முடித்து டப்பிங் பணியையும் செய்துகொண்டிருக்கிறார்.

சுரேஷ் காமாட்சி விளக்கம்:

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அண்மையில் அளித்த பேட்டியில், வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியதற்கு காரணம் தெரியவில்லை. மீண்டும் பிதாமகன் போன்ற கேரக்டரில் அவர் நடிப்பது சரிவராது என்று முடிவெடுத்து சூர்யா விலகியிருக்கலாம். தற்போது அவர் மீது இருக்கும் மக்களின் பார்வையை மாற்ற வேண்டாம் எனவும் நினைத்திருப்பார். சூர்யாவுக்கும் இயக்குநர் பாலாவுக்கு இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடோ பிரச்சனையோ இல்லை.

சூர்யா மீது அளவு கடந்த எதிர்ப்பார்ப்புகளுடன் இருக்கும் ரசிகர்களுக்கு ஏற்றபடி படத்தை கொடுக்க வேண்டும் என்பதால் நடிகர்களால் அதை மீறி செயல்பட முடியவில்லை என புது விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார். ஆனால், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சனை வராமல் பாதி படத்தில் இருந்து பல கோடி செலவு செய்த பின்னர் சூர்யா விலகுவாரா? என சுரேஷ் காமாட்சியிடமே ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews