பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… இனி நீங்க அலையவே வேண்டாம்… இன்று அமலாகும் புதிய திட்டம்!

பள்ளி மாணவர்களின் நலன் கருதி புதிய திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். எந்த சேவைக்கும் ஆதாரை அட்டையை அடையாள அட்டையாக கொடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

வங்கி கணக்கு ஆரம்பிப்பதில் தொடங்கி பல சேவைகளுக்கு ஆதார் அட்டை தேவைப்படுகிறது. எனவே ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தை உணர்ந்து புதிதாக ஆதார் அட்டை எடுப்பது அல்லது ஏற்கனவே வைத்திருக்கும் ஆதாரில் திருத்தங்கள் இருந்தால் மாற்றிக் கொள்வது என மக்கள் தீவிரமாக இருப்பார்கள்.

ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் முகவரி திருத்தம் போன்றவற்றை ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். அதே நேரம் தொலைபேசி எண்ணை மாற்ற வேண்டும் என்றால் இ-சேவை மையத்திற்கும் ஆதார் பதிவு செய்யும் இடத்திற்கும் தான் செல்ல வேண்டும்.

அதேபோன்று பள்ளி குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுப்பதற்கும் அவர்களது பழைய ஆதாரில் திருத்தம் மேற்கொள்வதற்கும் இதே நடைமுறைதான். இதனால் பள்ளி மாணவர்களும் ஆதருக்காக அலைய வேண்டிய சூழல் இருந்தது.

ஆனால் இன்றிலிருந்து இந்த கடினமான சூழல் மாறுகிறது. அதாவது பள்ளி மாணவர்கள் இன்று முதல் அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே புதிதாக ஆதார் அட்டைக்கு பதிவு செய்யவும் ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கோயம்புத்தூரில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதேபோன்று இன்றைய தினமே மற்ற மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளில் இதனை தொடங்குவதற்கு கடந்த 21 ஆம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில் மார்ச் 15 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே பள்ளி மாணவர்கள் எளிதாக புதிய ஆதார் விண்ணப்பிக்கவும் பழைய ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்ளவும் முடியும் என்று கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...