சூப்பரா நடிக்குறே கண்ணா.. 40 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்க்கு சிவாஜி கொடுத்த பரிசு..

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தற்போது இந்திய சினிமாவிலும் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக GOAT என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். பொதுவாக விஜய் படம் என்றாலே அதன் அறிவிப்பு வெளியான நாள் முதல் அதிக அளவில் எதிர்பார்ப்பு உருவாகி விடும்.

அந்த வகையில், Goat படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் படத்தின் அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர். அதே போல, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, ஸ்னேகா, மைக் மோகன் என 90ஸ்-களில் கலக்கிய நடிகர், நடிகைகள் ஒரு பக்கமும், இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி, வைபவ் உள்ளிட்டோர் ஒரு பக்கமும் நடிகர் விஜய்யுடன் இணைந்திருப்பதால் படம் எந்த மாதிரி கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்பதை அறியும் ஆர்வமும் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

இதனிடையே, புத்தாண்டு மற்றும் பொங்கல் தினத்தில் Goat படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அதிகம் டிரெண்டிங்கிலும் இருந்தது. விஜய் இரு வேடத்தில் நடிப்பதாக போஸ்டர் மூலம் ரசிகர்கள் குறிப்பிட்டு வரும் நிலையில், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டோரும் இந்த போஸ்டரில் இடம்பெற்றிருந்தனர்.

இதனிடையே, நடிகர் விஜய்க்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கொடுத்த பரிசு தொடர்பான செய்தி, ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று முன்னணி நடிகராக விஜய் விளங்கினாலும் அவரது ஆரம்ப காலத்தில் பல தடைகளை தாண்டி உயரவும் செய்திருந்தார். இவரது தந்தையும் இயக்குனருமான எஸ்ஏசி, மகனை வைத்து பல படங்களை தொடர்ந்து இயக்கினார். ஆனாலும் பெரிய அளவிலான அங்கீகாரம் விஜய்க்கு கிடைக்கவில்லை. இதன் பின்னர் பூவே உனக்காக உள்ளிட்ட படங்கள் தான் விஜய்யை உயர்ந்த நடிகராக மாற்றி இன்று இந்திய அளவிலும் அவருக்கான பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது.

பல பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுடன் பல படைப்புக்களை கொடுத்துள்ள விஜய், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து ஒன்ஸ்மோர் என்ற படத்திலும் நடித்துள்ளார். சிவாஜி நடித்த காலகட்டத்தில் ஒரு காட்சியிலாவது அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்காதா என பலரும் ஏங்கிய வேளையில், ஒரு படம் முழுக்க அவருடன் பயணிக்கும் வாய்ப்பும் விஜய்க்கு கிடைத்திருந்தது.

முன்னதாக தமிழில் ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்பாக குழந்தை நட்சத்திரமாக விஜய் பல படங்களில் நடித்து வந்தார். அப்போது வெற்றி என்ற படத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்து விட்டு அவரை பாராட்டிய சிவாஜி கணேசன், 500 ரூபாயை பரிசாக கொடுத்திருந்தார். பின்னாளில் பல ஆண்டுகள் கழித்து அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் விஜய் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews