பாரதிராஜாவை காட்டுப்பயலே என்ற சிவாஜி… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமான நடிப்பைக் கொண்ட படம் முதல் மரியாதை. கிராமத்துக்கே உரிய அழகியலோடு இயக்குனர் இமயம் பாரதிராஜா அற்புதமாக அந்தப் படத்தை எடுத்து இருப்பார்.

படத்தின் பாடல்களும் இளையராஜாவின் கைவண்ணத்தில் அருமையாக இருந்தன. அந்தக் காலத்தில் பட்டி தொட்டி எங்கும் இந்தப் பாடல்கள் தான் ஒலித்தன. படமும் பட்டையைக் கிளப்பியது.

பாரதிராஜாவின் இயக்கத்தில் முதல் மரியாதை படத்தில் சிவாஜி ரொம்பவே அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்தப் படம் உருவான விதம் பற்றி பாரதிராஜா சொல்லும்போது பல தகவல்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

நான் எப்போதும் கதாநாயகர்களுக்காக கதை எழுதியதில்லை. ஆனால் முதல் மரியாதை கதையை செல்வராஜ் சொன்னபோது என் மனதிலே கம்பீரமாக எழுந்தது சிவாஜி தான்.

அந்தப் படத்தில் நடிக்க அவரிடம் பேசினேன். ‘மேக்கப், விக் கிடையாது. நான் சொல்ற மாதிரி நடிங்க. நான் சொல்ல மாதிரி உட்காருங்க’ன்னு சொன்னேன். அவர் என்னை அப்படியே பார்த்தார். முதல் மரியாதை படப்பிடிப்புக்காக சிவசமுத்திரம் அருகில் உள்ள கிராமத்திற்கு வந்தோம். சிவாஜி அங்கு வந்தார். அங்க உட்காருங்க.

இங்க திரும்பிப் பாருங்கன்னு அவரை சொல்லிக் கொண்டே இருந்தேன். 3 நாள் படப்பிடிப்பு போச்சு. அப்போ ‘பாரதி, உங்கிட்ட கேட்க வெட்கமா இருக்கு. என்ன தான் நடக்குது? என்ன தான் படம்பிடிக்குற நீ’ன்னு கேட்டார் சிவாஜி.

‘அண்ணே இப்ப ஒண்ணும் கேட்காதீங்க. நான் படமா உங்களுக்குக் காட்டுறேன்’னு சொன்னார். ஒரு காட்சில என்னை நடிச்சிக் காட்டச் சொன்னார். நான் நடிச்சிக் காட்டுனேன். ‘இவர் நடிச்சதுல 10 சதவீதம் நடிச்சா போதும். பேரு வாங்கிடலாம்’னு ராதாவிடம் சொன்னார். அவர் அப்படி பாராட்டிய போது நான் ‘சும்மா இருக்காம, அண்ணே தேரில இருந்து நான் சென்னை வந்ததே உங்க மார்க்கெட்ட காலி பண்றதுக்குத்தான்’னு சொன்னேன்.

MM
MM

அதற்கு சிவாஜி ‘அப்படியா, உங்கவீட்டுல கண்ணாடிலாம் இல்லையா… உன் மூஞ்சை கண்ணாடில பார்த்ததே இல்லையா?’ன்னு கேட்டார் சிவாஜி. படத்தை முடிச்சி சிவாஜிக்குப் போட்டுக் காட்டியதும் ‘ஏன்டா காட்டுப்பயலே எப்படிடா படம் எடுத்து வச்சிருக்க? இப்படி திரும்பு. அப்படி திரும்புன்னு சொன்னே. இது வேர்ல்டு கிளாசிக் படம்டா…’ என்று பாரதிராஜாவைபாராட்டினாராம் சிவாஜி.

மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...