அவரு வேணும்னே தான் செஞ்சாரு.. சத்யராஜுடன் இணைந்து ஆட மறுத்த சில்க் ஸ்மிதா..

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக ஒரு காலத்தில் இருந்தவர் சில்க் ஸ்மிதா. அதிகமாக கிளாமர் கதாபாத்திரங்களில் சில்க் நடித்திருந்தாலும் அவரது நடிப்பும் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கட்டிப் போட்டது என்று தான் சொல்ல வேண்டும். மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த சில்க் ஸ்மிதா, பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருந்தார்.

கிளாமர் பாடல்களில் சில்க் ஆடினார் என தெரிந்தாலே அந்த படத்தை பார்ப்பதற்கே இளைஞர்கள் கூட்டம் திரை அரங்கை நோக்கி படையெடுத்த காலம் உண்டு. பொன்மேனி உருகுதே, நேத்து ராத்திரி யம்மா உள்ளிட்ட சில்க் தோன்றி இருந்த பல பாடல்கள் ரசிகர்களை கிறங்கடித்தது என்று தான் சொல்ல வேண்டும். நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகளைக் கடந்து சில்க், சினிமாவில் ஒரு முக்கிய இடம் பிடித்தார்.

அதே போல, கிளாமர் கதாபாத்திரங்கள் இல்லாமல் தனது கண்களாலேயே பலரை சொக்க வைத்த சில்க் ஸ்மிதாவை ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் கூட விரும்பினர். அது மட்டுமில்லாமல், மிக குறுகிய ஆண்டுகளிலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் சில்க் நடித்ததால் அவர் மீதான வதந்திகளும், விமர்சனங்களும் கூட அதிகமாக இருந்தது.

பலரும் சினிமாவில் கொடி கட்டிப் பறக்க தட்டி முட்டி கொண்டிருந்த நிலையில், வந்த போக்கில் சில்க் ஜெயித்தால் அவர் மீது அதிக பொறாமை கொண்டும் நடந்தனர் சிலர். ஆனால், இவை எதையும் காதில் போட்டுக் கொள்ளாத சில்க் ஸ்மிதா, அதை தாண்டி சினிமாவில் வெற்றி கண்டார். தமிழ்நாட்டில் சில்க் ஸ்மிதாவுக்கென ரசிகர்கள் மன்றமும் உருவாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. தவிர்க்க முடியாத நடிகையாக தென் இந்திய சினிமாவில் வலம் வந்த அவரின் மரணம், இன்று வரையிலும் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது.

இந்த நிலையில், சத்யராஜுடன் இணைந்து சில்க் ஸ்மிதா ஆட மறுத்தது தொடர்பான செய்தி தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ராம நாராயணன் இயக்கத்தில் மோகன் கதாநாயகனாக நடித்த படத்தில் சத்யராஜ் இன்னொரு நாயகனாக நடித்திருந்தார். இதில் சத்யராஜ் மற்றும் சில்க் ஸ்மிதா ஆகியோர் இணைந்து ஆடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது தெரியாமல் சில்க் காலில் சத்யராஜ் மிதித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த சத்யராஜ், வேண்டுமென்றே தான் அவர் தனது காலில் மிதித்து விட்டதாக சில்க் ஸ்மிதா கூறிவிட்டு ஆடாமல் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். சத்யராஜ் நடிக்க ஆரம்பித்த சமயம் என்பதால் நடனம் அந்த அளவுக்கு தெரியாததால் தான் மிதித்து விட்டதாக கூறி சில்க் ஸ்மிதாவை மீண்டும் சமரசம் செய்து அழைத்து வந்தனர். தொடர்ந்து, பின்னாளில் ஜீவா என்ற படத்தில் சத்யராஜுடன் இணைந்து நடித்த போது தனது காதல் பற்றி அவரிடம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு சில்க் ஸ்மிதா நட்பாகி போனதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.