முதல்ல பிளைட் வாங்கிடுறேன்!.. இந்த முறை அது மேலத்தான் டான்ஸ்.. ஷாருக்கான் – மணிரத்னம் செம க்யூட்ல!

இந்தியன் ஆஃப் தி இயர் 2023 என்ற விருது வழங்கும் விழா மும்பையில் CNN நியூஸ் சார்பில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது . அந்த விழாவின் மேடையில் பேசிய இயக்குநர் மணிரத்னம் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியன் ஆஃப் தி இயர் 2023 விருதை இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் அனிருத், மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெற்றனர். சோழர்களின் வரலாற்று மிக்க கதையை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை முன்னணி நடிகர்களான ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, திரிஷா, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு ஆகியோரை வைத்து மிக பிரம்மாண்டமாக இரண்டு பாகத்தையும் இயக்கியிருந்தார். அந்த படம் ரசிகர்களின் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதையடுத்து, பல ஆண்டுகள் கடந்து கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் இயக்கவுள்ளார்.

ஷாருக்கான், மணிரத்னம், அனிருத்துக்கு விருது:

பிக் பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் அடுத்ததாக கமல் ஹாசன் தக் லைஃப் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படமும் மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்ப்பார்கப்படுகிறது. ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கெளதம் கார்த்திக் உள்ளிட்டோர் படத்தில் இணைந்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நயந்தாராவுடன் இணைந்து அட்லி இயக்கத்தில் நடித்த ஜவான் திரைப்படம் ஒரு பான் இந்தியா படமாக வெளியானது. இந்தியில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. எவ்வளவு தான் இணையதளத்தில் அந்த படத்தையும் அட்லியையும் ட்ரோல் செய்திருந்தாலும் படம் பெரிய அளவிலான வசுலை குவித்தது.

மணிரத்னம் படத்தில் மீண்டும் இணைவாரா ஷாருக்கான்?

இசையமைப்பாளர் அனிருத் எல்லா முன்னணி நடிகர்களின் முதல் சாய்ஸாக உள்ளார். ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த படத்தின் வெற்றிக்கு காரணமே அனிருத் தான் என பாராட்டி இருந்தார். அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வருகிறார்.

இந்தியன் ஆஃப் தி இயர் 2023 விருதை பெற்றுக்கொண்ட ஷாருக்கான், “இந்தாண்டு மட்டுமில்லாமல் எப்போழுதும் சிறந்த இந்தியனாக இருப்பேன் ,நன்றி” எனக் கூறினார். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் “அடுத்து எப்போது மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பீர்கள்” என ஷாருக்கானிடம் கேட்டதற்க்கு, உடனே ஷாருக்கான், மணிரத்னத்திடம் அடுத்து எப்போது படம் பண்ணலாம் எனக் கேட்டார். உயிரே படத்தில் தையா தையா பாடலில் ரயிலின் மீது டான்ஸ் ஆடியதை சுட்டிக் காட்டிய ஷாருக்கான், இந்த முறை விமானத்தின் மேலே ஏறி டான்ஸ் ஆடிட வேண்டியதான் என்றார். இதனைக் கேட்டு சிரித்த மணிரத்னம், சீக்கிரமே பிளைட் வாங்கிவிடுகிறேன், அதன்பின்னர் படத்தில் இணையலாம் என்றார்.

அதற்கு ஷாருக்கான், மணிரத்னமிடம், “இப்போது எனது படங்கள் போகுற வேகத்துல பிளைட் வாங்குறது எல்லாம் விஷயமே கிடையாது” என சொன்னார்.
ஆனால், மணிரத்னம் நானே சொந்தமாக பிளைட் வாங்கிட்டு வருகிறேன். அதன்பின்னர் கண்டிப்பாக இணையலாம் என மேடையில் இருந்த ஷாருக்கானை காமெடியாக கிண்டல் செய்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.