மன்னிப்பு கேட்ட ஞானவேல்ராஜா!.. போலி மன்னிப்பு என பொளந்துக் கட்டிய சசிகுமார்!

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா அளித்த பேட்டியில் இயக்குனர் அமீரை பற்றி பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதை தொடர்ந்து ஞானவேல் ராஜாவின் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பருத்திவீரன் பட பிரச்சனை கடந்த 17 வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அது தொடர்பாக அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குனர் அமீர் தன்னிடம் பொய் கணக்கு காட்டி பணம் பறித்ததை போன்ற ஆதராமில்லாத குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

ஞானவேல்ராஜா மன்னிப்பு:

இது தொடர்பாக இயக்குனர் சமுதிரக்கனி, சசிகுமார், பொன்வண்ணன், கரு. பழனியப்பன், ஆகியோர் எதிர்ப்பு தெறிவித்து வந்த நிலையில் மூத்த இயக்குனரான பாரதிராஜாவும் அதுகுறித்து தனது சமூக வளைதலத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டிருந்தார், அதில் உங்களுக்கும் அமீருக்கும் இடையே பொருளாதார காரணங்களுக்காக கருத்து வேறுப்பாடு இருக்கலாம். ஆனால் பேட்டியில் ஒரு சிறந்த படைப்பாளியைப் பற்றி அவரது கலைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. உங்களை அடையாளம் கண்டு வெற்றிகரமான தயாரிப்பாளராக மாற்றியதில் அமீருக்கு பெறிய பங்களிப்பு உண்டு. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஒரு சிறந்த படைப்பாளியை இழிவு படுத்தியதற்காக வருந்தி சுமூகமாக பேசி பிரச்சனையை தீர்க்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

பருத்திவீரன் தயாராகும் போது ஞானவேல் ராஜா நிதியை நிறுத்தியதில் அமீர் தனது சொந்த பணத்தையும் கடன் வாங்கியும் அந்த படத்தை முடித்ததாக இயக்குநர் சசிகுமாரும், சமுத்திரக்கனியும் சாட்சி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஞானவேல்ராஜா தான் வருத்தம் தெரிவித்து அளித்த அறிக்கையில், ”பருத்திவீரன் பிரச்சனை 17 ஆண்டுகளாக நடந்துவரும் வகையில் இது வரை நான் அதை பற்றி பேசியது இல்லை . அதோடு அவரை அமீர் அண்ணா என்று தான் எப்போதும் கூப்பிடுகிறேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்துடன் நெருங்கி பழகியவன். அவர் அண்மைய பேட்டிகளில் என் மீது சுமத்திய தவறான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். என்னை வாழ வைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சசிகுமார் விளாசல்:

இந்நிலையில், அந்த அறிக்கையை பார்த்த சசிகுமார் இது போலித்தனமாக இருக்கிறது. அமீரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்பது போல இல்லை. பேசுவதெல்லாம் பேசிவிட்டு இப்படி பொத்தாம் பொதுவாக ஒரு அறிக்கை வெளியிடுவது ரொம்ப தவறு. இதை பார்த்து எல்லாம் நாங்கள் ஏமாறமாட்டோம் என அதிரடியாக தனது கண்டனத்தை மீண்டும் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...