பிரபாஸின் அசுர வேட்டை!.. 500 கோடி வசூல் செய்த சலார்.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், பாபி சிம்ஹா, மைம் கோபி, ஜகபதி பாபு, ராமசந்திரா, ஸ்ரேயா ரெட்டி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த டிசம்பர் 22ம் தேதி சலார்: சீஸ் ஃபயர் பார்ட் 1 வெளியானது.

இந்த படத்தை சுமார் 4 ஆண்டுகள் ரத்தமும் வியர்வையும் சிந்தி பிரசாந்த் நீல் தனது சொந்த குடும்பத்தையும் பார்க்காமல் உழைத்துள்ளார். கேஜிஎஃப் சாயலிலேயே இருப்பதாக விமர்சிக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக முதல் நாளில் இருந்தே மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது.

500 கோடி வசூல் செய்த சலார்:

கேஜிஎஃப் 2வை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் ஒரு வாரத்தில் 500 கோடி ரூபாய் வசூலை அள்ளி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படங்கள் மூலம் உலக அளவில் பிரபலமானவர் பிரபாஸ். யார் கண் பட்டதோ தெரியவில்லை அதன் பின்னர் பெரிய பட்ஜெட் படங்கள் கிடைத்தாலும் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்தார் பிரபாஸ்.

பிரபாஸுக்கு கிடைத்த வெற்றி:

ஹிந்தியில் வெளியான சாஹோ, தெலுங்கில் உருவான ராதேஷ்யாம் மற்றும் இந்த ஆண்டு ராமாயண காவியத்தை மையமாக உருவான ஆதி புருஷ் உள்ளிட்ட திரைப்படங்கள் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருந்தாலும் அதற்கு ஏற்பப் பெரிய வசூல் ஈட்டாமல் உங்களுக்கே மோசமான நிலையில் படு தோல்வியை சந்தித்தன.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் வசூலில் சொதப்பி விட்டால் அதன் பின்னர் அடுத்தடுத்து வெளியாக உள்ள பிரபாஸின் நான்கு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் அடிவாங்கும் என்கிற நிலை உருவாகியிருந்தது. ஆனால், அந்த அளவுக்கு மோசமாக கொண்டு செல்லாமல் நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்றாலும் இதுவரை ஒரு வாரத்தில் 500 கோடி வசூலை சலார் எட்டி இருப்பதாக கூறுகின்றனர்.

ஓடிடி ரிலீஸ்:

இந்நிலையில், சலார் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிரடி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. தமிழர்கள் பொங்கல் என்றும் ஆந்திராவில் சங்கராந்தி என்றும் கொண்டாடப்படும் பண்டிகையை ஒட்டி சலார் ஓடிடியில் வெளியாகப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. விரைவில் இது தொடர்பான அறிவிப்பை நெட்பிளிக்ஸ் வெளியிடும் என்றே தெரிகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.