ரோஹித், விராட் இல்லாத இந்திய அணி.!! ராகுல் தலைமையில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் வீரர்கள்.!!

தென்னாப்பிரிக்க தொடருக்குப் பின்பு இந்தியா மேற்கொள்ளும் ஒவ்வொரு சுற்று பயணமும் இந்தியாவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து அணியுடன் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் இந்தியா அனைத்து விதமான தொடர்களையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பின்பு மேற்கத்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றியினை பெற்றது. இதனால் இந்திய வீரர்கள் பலருக்கும் ஜிம்பாவே தொடரில் ஓய்வழிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இன்று இந்தியா ஜிம்பாவே அணிகள் இடையையான முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. இந்த முதல் ஒருநாள் போட்டியானது ஹராரேயில் நடைபெறுகிறது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று பிற்பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டவருக்கு ஓய்வழிக்கப்பட்டுள்ளதால் கேப்டன் பொறுப்பில் கே.எல்.ராகுல் உள்ளார். இதனால் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி முதல் ஒரு நாள் போட்டியை சந்திக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.