கமல் முதல் சூர்யா வரை!.. மகள் கல்யாணத்துக்கு அனைவரையும் அழைக்கும் ரோபோ சங்கர்!

காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமணம் வரும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி மதுரையில் உள்ள திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த மாதம் தொடக்கத்தில் தனது மகளுக்கும் தனது மனைவியின் தம்பி கார்த்திக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தத்தை நடத்தி இருந்தார் ரோபோ சங்கர். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துக்களைப் பெற்றன.

Snapinsta.app 429309689 397221299663251 2048010777561861424 n 1080

 

ரோபோ சங்கர் மகள் திருமணம்:

இந்நிலையில், ஒரே மாதத்தில் திருமண விழாவையும் உடனடியாக நடத்தும் முடிவுக்கு ரோபோ சங்கர் வந்திருக்கிறார். அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்த பிகில் படத்தில் பத்திரத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இந்திரஜா சங்கர். தனது தாய் மாமனான கார்த்திகையே காதலித்து வந்த நிலையில், மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ள போகிறார்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, மு .க. ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழை குடும்பத்துடன் நேரில் சென்று கொடுத்து வருகிறார் ரோபோ சங்கர்.

சூர்யாவுக்கு அழைப்பிதழ்:

இந்நிலையில், நேற்று இரவு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்திருக்கிறார். கங்குவா படத்தின் டப்பிங் பணிகளுக்காக மும்பை வீட்டில் இல்லாமல் தற்போது சென்னையில் அப்பா வீட்டிலேயே தங்கி இருக்கிறார் சூர்யா. அந்த தகவலை அறிந்த ரோபோ சங்கர் தனது குடும்பத்துடன் சென்று நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியை சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் அனைத்து பிரபலங்களையும் சந்தித்து ரோபோ சங்கர் தனது மகள் இந்திரஜா சங்கரின் திருமண விழாவுக்கு வருகை தர வேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருகிறார். மதுரையில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்பார்கள் என்கிற கேள்வியும் ரசிகர்கள்மத்தியில் இருந்துள்ளது.

அஜித்தை அழைப்பாரா?

திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி என அனைத்துமே ரோபோ சங்கரின் சொந்த ஊரான மதுரையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளில் ரோபோ சங்கர் நடித்திருக்கிறார். நடிகர் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் இணைந்து நடித்துள்ள ரோபோ சங்கர் அஜித் தற்போது விடாமுயற்சி சூட்டிங் செல்லாமல் சென்னையில் உள்ள நிலையில், அவரது வீட்டுக்கும் சென்று திருமண அழைப்பிதழ் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...